உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் கடும் அவதி

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் கடும் அவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து பிரிட்டன் பர்மிங்காம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலிருந்து பிரிட்டன் பர்மிங்காமுக்கு ஏர் இந்தியா போயிங் 787-8 விமானம் புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gnqhot13&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் ரேம் ஏர் டர்பைன் (RAT) பயன்படுத்தி விமானம் பர்மிங்காம் விமானநிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதனால் பர்மிங்காமில் இருந்து டில்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை விமான நிறுவனம் செய்தது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Srprd
அக் 05, 2025 15:14

Air India doesn't seem to do aircraft maintenance at all. They are taking people's lives very lightly.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 05, 2025 14:11

ஏன் ஏர் இந்தியா விமானங்கள் மட்டும் அதிகம் டார்கெட் செய்யப்படுகின்றன


ஆரூர் ரங்
அக் 05, 2025 12:59

இதற்கு முன்பும் அன்றாடம் ஒரு இந்திய விமானத்திலாவது பிரச்னை எழுந்து கொண்டுதானிருந்தது. அகமதாபாத் விபத்துக்குப் பிறகு செய்திகள் மிகைப்படுத்தபட்டு வெளிவருகின்றன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை