உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எமர்ஜென்சி நினைவுகளை மறக்கக்கூடாது: அமித்ஷா

எமர்ஜென்சி நினைவுகளை மறக்கக்கூடாது: அமித்ஷா

புதுடில்லி: '' எமர்ஜென்சியின் நினைவுகளை ஒரு போதும் மறக்கக்கூடாது,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.பிரதமர் மோடி எழுதிய 'The Emergency Diaries: Year that forged our leaders' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் அமித்ஷா பேசியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l6abl4jk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று நாம் சுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியாவின் இருண்ட பக்கத்தை நினைவு கூர ஒன்று சேர்ந்துள்ளோம். எமர்ஜென்சியின் நினைவுகளை மனதில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அது போன்ற நிலை மீண்டும் ஏற்படாது. மேலும், இளைஞர்கள் பண்பட்டவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்வார்கள். இதற்காக தான், ஜூன் 25ம் தேதியை 'Samvidhan Hatya Diwas' ஆக கொண்டாட பிரதமர் முடிவு செய்தார்.எமர்ஜென்சிக்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் மோடி இளம் தலைவராக 19 மாதங்கள் பங்கேற்றார். மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்ற பிரதமர், அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை ஏற்பாடு செய்தார். அந்த காலத்தில் நாளிதழ்கள் ரகசியமாக அச்சிடப்பட்டன. அதனை சந்தைகளிலும், மாணவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் மோடி விற்பனை செய்தார். 24 - 25 வயதில் குஜராத்தில் அவரது தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.25 வயது இளைஞராக இருந்த போது, அப்போது பிரதமர் ஆக இருந்த இந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்தவர் மோடி. அதே தலைவர் தான், 2014ல் வாரிசு அரசியல் என்ற எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதற்கான காரணத்தை வேரோடு அழித்துள்ளார். சர்வாதிகாரத்தை அழிக்க போராட்டம் நடத்திய இளைஞர் தான் தற்போது நாட்டின் ஜனநாயகத்தின் வேரை பலப்படுத்தி வருகிறார். எமர்ஜென்சியின் போது நீதித்துறையில் தலையிட்ட இந்திரா, பத்திரிகை சுதந்திரத்தையும் நசுக்கினார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 26, 2025 06:35

எமெர்ஜென்சியினால் அதிகம் பாதிக்க பட்டது கலைஞர் குடும்பம் ... அதனால் இந்திரா காந்தியை சேலை கட்டிய ஹிட்லர் என்றார் ...திமுக தொண்டர்கள் போலீசால் வெளுக்கப்பட்டனர் ..சிட்டிபாபு , மற்றும் சாத்தூர் பாலகிருஷ்ணன் போன்றவர்கள் அடிபட்டு சிறையிலேயே மரணம் அடைந்தார்கள் ,,கலைஞர் மேடைதோறும் நெருக்கடிநிலை கொடுமைகளை முழங்கினார் ...அதற்க்கு பழிவாங்க இந்திரா காந்தி தேர்தலில் தோற்றுப்போய் மதுரைக்கு வந்தபொழுது ,,திமுகவினர் தாக்கினார் ..


ராஜா
ஜூன் 26, 2025 05:10

தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து நடக்காத வடக்கன்ஸை என்னவென்று சொல்வது.


vivek
ஜூன் 26, 2025 06:09

உன்னுடைய டாஸ்மாக் உணர்வுகளை அவர் சொல்லவில்லை ராசா


ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 25, 2025 23:08

இப்போ நடக்குற பாசிஸ ஜண்டாவை விடவா?


Sivakumar
ஜூன் 25, 2025 21:31

ஆமா , நீங்க ஒடிசா தேர்தல்ல ஒடிசாவை தமிழன் ஆளலாமா , ஜெகன்நாதர் கோவில் சாவி தமிழ்நாட்டில் இருக்குது னு சொன்னதையும் மறக்கவே மாட்டோம்


Narayanan Muthu
ஜூன் 25, 2025 19:24

அறிவிக்கப்பட்ட எமெர்ஜென்சியை விட அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி ஆபத்தானது. கடந்த பத்தாண்டுகளாக அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடந்து வருகிறது என்பதை மக்கள் வருங்காலத்திலும் மறக்க மாட்டார்கள்.


ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 18:26

பரம்பரைக் குடும்ப ஆட்சி எவ்வளவு ஆபத்தானது. அதுவும் முரட்டு வாரிசுகளின் கைகளில் அதிகாரங்கள் சேர்ந்தால் என்னாகும் என்பதெல்லாம் மக்களுக்குப் புரிய வைத்த காலத்தின் வரலாறு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை