உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜிஎஸ்டி வரி குறைப்பு சலுகை வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யுங்கள்: பியூஷ் கோயல் வேண்டுகோள்

ஜிஎஸ்டி வரி குறைப்பு சலுகை வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யுங்கள்: பியூஷ் கோயல் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தொழில் துறையினருக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்தார்.அண்மையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மத்திய அரசு மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. ஜி.எஸ்.டி., அடுக்குகளை, நான்கிலிருந்து இரண்டாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மறு சீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., வரும் 22ம் தேதி முதல் 5, 18 என்ற இரண்டு விகிதங்களில் மட்டுமே ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். 12 மற்றும் 28 விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது: செப்டம்பர் 22 முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.வணிகம் செய்வதையும் உற்பத்தியையும் எளிதாக்குவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது. தயவு செய்து முழு பலனையும் நுகர்வோருக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இது தொழில் துறைக்கும் பயனளிக்கும். உலக நாடுகள், இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது. இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Senthilkumar Murugesan
செப் 21, 2025 07:51

no benefits for public. govt may reduce gst manufacturer or distributor will not reduce the price?


சங்கி
செப் 21, 2025 00:28

அப்ப மக்களுக்கு எந்த லாபமும் இல்ல?


ManiMurugan Murugan
செப் 20, 2025 23:10

அருமை கண்டிப்பாக வரையறை படுத்த வேண்டும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோகன் ஊழல் கட்சி தி மு கா கூட்டணி ஜி எஸ் டி பற்றி தவறான புரிதலை உருவாக்கி உள்ளனர் இதுவரை வி எஸ் டி யார் மாநிலங்களுக்கு எந்த பயன் இல்லை என்றவர்கள் இப்போது 5000 கோடி இழப்பு என்கிறார்கள் இப்படி பொய் சொல்லி பித்தலாட்டம் செய்பவர்கள் மாநில ஜிஎஸ்டி யை வைத்து மக்களை ஏமாற்றலாம் அதனால் மத்தியரசு கவனத்தில் கைள்ளவேண்டும்


தாமரை மலர்கிறது
செப் 20, 2025 22:32

ஜிஎஸ்டி வரிகுறைப்பால் இந்தியர்கள் மிகுந்த குதூகலத்தில் உள்ளார்கள். உலகின் நாலாவது பெரிய பணக்கார நாடாக இந்தியா மாறிவிட்டது. விரைவில் இன்னும் ஒரே ஆண்டில் மூன்றாவதாக மாறும்.


Vasan
செப் 20, 2025 22:31

As per the suspicion of Shri.Piyush Goyal ji, is it possible for the GST tax reduction benefit not to reach the common public people? Is Finance Minister aware of this? Oh My God, our joy is short lived.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை