உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் வாக்காளர்களை கவர பா.ஜ., முயற்சி; ப.சிதம்பரம் விமர்சனம்

பீஹார் வாக்காளர்களை கவர பா.ஜ., முயற்சி; ப.சிதம்பரம் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹார் மக்களை கவரும் வகையில் மத்திய அரசு பட்ஜெட்டை உருவாக்கியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். டில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த பட்ஜெட் மூலம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையும், பீஹார் மக்களையும் கவருவதற்கு பா.ஜ., முயற்சிக்கிறது. இந்த பட்ஜெட்டானது, பீஹாரில் ஓட்டுப்போட தகுதியான 7.64 கோடி மக்களால் வரவேற்கப்படும். அதைத் தவிர பிற மாநில மக்களுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., எம்.பி.,க்களின் கைதட்டல்களுடன் கூடிய, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஆறுதலான வார்த்தைகள் மட்டும் தான். கடந்த 2024-25ம் நிதியாண்டில் திருத்தப்பட்ட வருவாய் ரூ.41,240 கோடியும், திருத்தப்பட்ட நிகர வரி வருவாய் ரூ.26,439 கோடியும் குறைந்துள்ளது. அதேபோல, மொத்த செலவினங்களும் ரூ.1.04,025 கோடியாக குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல, மூலதன செலவு ரூ.92,682 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.கடந்த ஆண்டை காட்டிலும் சுகாதாரத்துறைக்கு ரூ.1,255 கோடியும், கல்வித்துறைக்கு ரூ.11,584 கோடியும், சமூக நலத்திட்டங்களுக்கு ரூ.10,019 கோடியும், வேளாண்துறைக்கு ரூ.10,992 கோடியும், கிராமப்புற மேம்பாடு ரூ.75,133 கோடியும், நகர்ப்புற மேம்பாடு திட்டத்திற்கு ரூ.18,907 கோடியும், வடகிழக்கு மாநில மேம்பாட்டிற்கு ரூ.1,894 கோடியும் குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையோர் பிரிவினருக்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைத்துள்ளனர், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

பேசும் தமிழன்
பிப் 02, 2025 14:43

நீங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிரான பட்ஜெட் தாக்கல் செய்வீர்கள்... அவர்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.


kulandai kannan
பிப் 02, 2025 11:45

பின்னே தமிழக வாக்காளர்களைக் கவரவா பட்ஜெட் போட முடியும்? நம்மவர்களுக்கு குவாட்டர், பிரியாணி, 200 ரூபாய் போதும்.


அப்பாவி
பிப் 02, 2025 07:52

இவனெல்லாம் அவ்வளவு ஒர்த்தே இல்லை இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு


Rajasekar Jayaraman
பிப் 02, 2025 07:38

இந்திய பொருளாதார குற்றவாளியின் கேனைத்தனமான குற்றச்சாட்டு.


Gopal Raju
பிப் 02, 2025 01:55

Mr. PC, Modi ji need not attract any votes, voters. He is an Honey Nest and all Indians sorry the entire universe is surrounding him. Unlike you and your congress circling around Italian Woman


xyzabc
பிப் 02, 2025 00:00

கூட்டாளிகள் வாங்கும் லஞ்சத்திற்கு வரி கிடையாது. வாயை மூடி கொண்டு இரு.


Duruvesan
பிப் 01, 2025 22:16

நாம வாகளர்களை கவர ஏதும் பண்ணி இருந்தா 15 வருஷம் ஆட்சியில் இல்லாம இருப்போமா? தீயமுக துணை இல்லைனா டெபாசிட் வாங்குவுமா? போங்க பாஸ்


MARUTHU PANDIAR
பிப் 01, 2025 22:03

மிஸ்டர் திஹார் ரிட்டர்ன் கிங் பின், எதோ ஒரு பழ மொழி சொல்லுவாங்களே அது மாதிரி தான் இருக்கு நீரு வாயத்தொறந்தா....அதுனால தொறக்க வேண்டாம் .....அது தான் மரியாதை ..புரியுதா ?


Sundar R
பிப் 01, 2025 21:36

ப. சிதம்பரம் அவர்கள் பிஹாரில் விளையாடாமலேயே பாஜக ஜெயித்து விடும் என்பது போல் சொல்கிறார். பிஹாரில், ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் ஒன்று சேர்ந்த மாகாகத்பந்தன் என்ற கூட்டணி இருக்கிறது. பிரசாந்த் கிஷோர் மகாகத்பந்தன் கூட்டணியில் சேருவாரா? என்பது யாருக்கும் தெரியாது. தமிழகத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய ஒரு புண்ணியவானால் ஐந்து பெரிய மாநிலங்களில் விளையாடாமலேயே பெரிய அளவில் பாஜக வெற்றி பெற்றது. 2025 பிஹார் அசெம்பிளி தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணியை பாஜக ஆடாமலேயே வெல்ல முடியவில்லை என்றாலும் கடுமையான போட்டியை எதிர்கொண்டு பாஜக வென்றாலும் பல. சிதம்பரம் அவர்களைப் பாராட்டுவோம்.


sridhar
பிப் 01, 2025 21:19

Old man ,keep shut . No one needs your opinion.


முக்கிய வீடியோ