உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லஞ்ச வழக்கு; 16 ஆண்டுக்குப் பிறகு பஞ்சாப் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விடுதலை

லஞ்ச வழக்கு; 16 ஆண்டுக்குப் பிறகு பஞ்சாப் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விடுதலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: லஞ்ச வழக்கில் இருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவை 16 ஆண்டுக்குப் பிறகு சி.பி.ஐ., நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் டில்லி அரசு இல்லத்தில் இருந்து கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 2008ம் ஆண்டு நடந்த லஞ்ச வழக்கில் இருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ் விடுவிக்கப்பட்டுள்ளார். சுமார் 16 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு, சி.பி.ஐ., நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. இது குறித்து நீதிமன்ற வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் யாதவ், 'நான் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை. எனக்கு எதிரான விசாரணையில், நான் குற்றம் செய்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது,' எனக் கூறினார். வழக்கின் பின்னணி!கடந்த 2008ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் வீட்டிற்கு சென்ற கிளர்க் ஒருவர், ரூ.15 லட்சம் ரொக்கத்தை கொடுத்துள்ளார். இந்தப்பணம், இன்னொரு நீதிபதிக்கு (நிர்மல் யாதவ்) லஞ்சமாக தரப்பட்டது; பெயரில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, வீடு மாறி வந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்ட நீதிபதி நிர்மல்ஜித் கவுர் போலீஸில் புகார் கொடுத்தார். சொத்துக்குவிப்பு வழக்கில், ஹரியானா கூடுதல் வக்கீல் சஞ்சீவ் பன்சால் என்பவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவதற்காக, நீதிபதி நிர்மல் யாதவுக்கு கொடுத்து அனுப்பிய லஞ்சப்பணம் என்று சொல்லப்பட்டது. வழக்கை சி.பி.ஐ., விசாரித்தது.இது தொடர்பாக 16 ஆண்டு விசாரணை நடந்த நிலையில், இன்று சி.பி.ஐ., நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது. இதில்தான், குற்றம் நிரூபணம் செய்யப்படவில்லை என்று கூறி, நிர்மல் யாதவ் விடுவிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kanns
மார் 30, 2025 07:37

SHAMEFUL GOVERNANCE& JUSTICE of REPUBLIC. DONT CHEAT the Nation & Supreme People.


spr
மார் 29, 2025 21:18

எந்த குற்றம் செய்தாலும் நீதிபதிகள் அமைச்சர்கள் ஆளுநர்கள் குடியரசுத் தலைவர், பண வசதியுள்ளவர்கள் என பெரியவர்கள் எவரும் தண்டிக்கப்பட வாய்ப்பே இல்லை எனும் போது எதற்காக விசாரணை என்றெல்லாம் காலவிரயம் பண விரையமெல்லாம். அன்றே அவர் உத்தமர் என்று சொல்லியிருக்கலாம். இவர்களை எல்லாம் ஆண்டவன் என ஒருவன் இருந்தால் மட்டுமே தண்டிக்க முடியும். இன்னமும் நம்புவோம்


Mecca Shivan
மார் 29, 2025 20:34

சரி.. அப்ப லஞ்சம் வாங்கியது யாரு ? சிபிஐ ஒரு காமெடி என்பதை நிரூபிக்கும் விசாரணை


अप्पावी
மார் 29, 2025 19:52

16 வருஷமா தொப்பை வளர்த்தாங்க.


अप्पावी
மார் 29, 2025 19:51

ஒரு வருஷத்தில் விசாரிச்சு தீர்ப்பு சொல்லியிருந்தா ஒத்துக்கலாம். 16 வருஷம் கழித்து இந்த வழக்கை விசாரிச்சவன் ரிடையராகி செத்தே போயிருப்பான். இப்போ இருக்கிற வழக்குகளையே விசாரிக்கத் துப்பில்லாம இருக்கு சி.பி.ஐ. பழைய வழக்கு எவனுக்கு ஞாபகம் இருக்கப்போகுது? தற்போதைய நீதிபதி வீட்டில் எரிஞ்ச பணவழக்கும் ஒரு 15, 20 வருஷம் கழிச்சு நிரபராதின்னு தீர்ப்பு குடுக்கறதுக்குள்ளாற நானே போய்ச் சேந்துருவேன்.


Appa V
மார் 29, 2025 20:03

ஆனா அந்த ஆள் முழிக்கிறது சரியில்ல


சமீபத்திய செய்தி