உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!

ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!

ஜாம்ஷெட்பூர்; ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் சம்பாய் சோரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஜார்க்கண்ட் மாஜி முதல்வரும், செரகில்லா தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சம்பாய் சோரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக ஜாம்ஷெட்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சம்பாய் சோரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு, வயிற்றுக் கோளாறு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக சம்பாய் சோரனை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சையை தொடங்கினர். தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதை எக்ஸ் வலை தள பக்கத்தில் சம்பாய் சோரன் உறுதிப்படுத்தி உள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது; உடல்நிலை கோளாறு காரணமாக நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளேன். கவலைப்பட ஒன்றுமில்லை என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். நான் நன்றாக இருக்கிறேன். வெகு விரைவில், ஆரோக்கியம் பெற்று மீண்டு வருவேன் என்று கூறி உள்ளார். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் சம்பாய் சோரன் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிகிறது. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி