உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டை இடிப்பது சட்டவிரோதம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டை இடிப்பது சட்டவிரோதம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசரால் இடிப்பது சட்ட விரோதம்' என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.வன்முறை, கலவரம், குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்படுவோரின் வீடுகளை புல்டோசர் வாயிலாக இடிக்கும் நடவடிக்கை புதுடில்லியில் துவங்கியது. பிறகு உ.பி., உள்பட பல மாநிலங்களில் இதுபோன்று புல்டோசர் வாயிலாக வீடுகள் இடிக்கப்படுவது தொடர்ந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் புல்டோசர் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்த வழக்கில், அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் இன்று (நவ.13) தீர்ப்பளிக்கப்படும் என்று சுப்ரீம்கோர்ட் கூறி இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8w3umnjn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று (நவ., 13) சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது. * குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசரால் இடிப்பது சட்ட விரோதம். அவர்களுக்கு இருக்கும் சில உரிமைகளை அரசு பறிக்கக் கூடாது.* யார் குற்றவாளி என்பதை அரசு அதிகாரிகளே முடிவு செய்ய முடியாது.* சட்டத்தை கையிலெடுக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.* சுப்ரீம்கோர்ட் வகுத்துள்ள நெறிமுறைகளை மாநில அதிகாரிகள் தன்னிச்சையாக மீற முடியாது.* அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது.* ஒருவர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டால், முழு குடும்பங்கள் தங்குமிடத்தை இடிக்க அதிகாரிகளை எவ்வாறு அனுமதிக்க முடியும்?* நியாயமான விசாரணை இல்லாமல் யாரையும் குற்றவாளியாக கருத முடியாது. * குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்கும் முன்னதாக, விரிவான விசாரணை நடத்த வேண்டும்.* இவ்வாறு தன்னிச்சையாக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை, ஆட்சி அடிப்படையை தகர்த்துவிடும்.* குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பதாலேயே அவரது வீட்டை அரசு இடிப்பது, அதிகார பகிர்வை மீறுவதாகும்.* இருப்பிட உரிமை என்பது அரசமைப்பு சாசனம் வழங்கி உள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.* நடுராத்திரியில் வீட்டை இடித்து குழந்தைகள், பெண்களை தெருவில் விடும் நடவடிக்கை மகிழ்ச்சி தரவில்லை.* புகாரை அடிப்படையாக கொண்டு ஒரு நபரை குற்றவாளி என அரசு தீர்மானித்து வீட்டை இடிக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

Ravichandran S
நவ 14, 2024 08:57

In that case let the Honourable courts complete the cases within one month and punish them. Dont Give Bail. Let the Judges show courage to not allowing adjournment , as they question the Good Government


Iniyan
நவ 13, 2024 23:40

நீதிபதிகளின் வீட்டை இடித்தால் இந்த மாதிரி தீர்ப்புக்கள் வராது.


Kanns
நவ 13, 2024 19:38

Shameful Justice& Governance. All esp Courts& Rulers Must Balance Control of LawlessCrime Goondaism& Legal Reliefs. Unfortunately All PowerMisusers Vote-HungryPartiesRulers, StoogeOfficials esp Police-Judges, News- HungryMedia, Grave Goondas are Never Punished BUT only Given Reliefs by CaseHungry Judges.UNFORTUNATelyEven Supreme LokSabha /JPCs areNOT Rectifying /PUNISHING Such PowerMisusers.


Ag Jaganath
நவ 13, 2024 18:34

கோர்ட் தீர்ப்பு எழுதபட்டது


Sree
நவ 13, 2024 17:28

பத்து உச்ச மாணி பஞ்சாயத்துகளை கத்தியால் குத்தினால் கணம் கத்திக்கு மட்டும் தண்டனை தாருங்கள் கத்திக்கு மட்டுமே சம்பந்தம் என பார்க்கணும்


kalyan
நவ 13, 2024 17:27

குற்றம் சாட்டப்பட்டவர் களின் வீட்டை இடிப்பது தான் தடை செய்யப்பட்டதே ஒழிய, அனுமதி இல்லாமல் அரசு பூமியில் கட்டப்பட்ட வீடுகளையோ , கட்டடங்களையோ இடிக்க அந்த தடையும் நீதிமன்றம் விதிக்கவில்லை . குற்றம் சாட்டப்பட்டவர்கள் , அனுமதி இல்லாமலும் அரசு நிலங்களையும் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி அதை மறைத்து தாம் குற்றம் சாட்டப்பட்டதனால் அரசு இடிக்கிறது என்ற வாதத்தை நீதிமன்றம் முன்னாள் வைத்தனர். அதற்காகத்தான் குற்றம் சாட்டப்பட்டதனால் மட்டும் இடிக்க முடியாது என்ற தீர்ப்பை உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ளது .


என்றும் இந்தியன்
நவ 13, 2024 16:41

இந்த தீர்ப்பு எப்படி இருக்கின்றது என்றால் 1-ஒருவன் இன்னொருவனை கத்தியால் கொலை செய்தால் இந்த மாதிரி அநீதிபதிகள் தீர்ப்பு இப்படி இருக்கும். கத்தியால் தான் அவன் இறந்தான் ஆகவே கத்திக்கு மாறன் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கின்றது இந்த கோர்ட் 2-ஒரு அறிவு கெட்ட மடச்சாம்பிராணி மற்றவர்களை மடச்சாம்பிராணி என்பதாக இந்த தீர்ப்பின் வரிகள் இருக்கின்றது. அநீதிபதிகளே அநீதிமன்றமே உன்னை நீ முதலில் திருத்திக்கொள். a-பெட்டி வாங்கி குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்வது,b-குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுப்பது, c- ஒரு தீர்ப்பு சொல்ல நீங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் 20 வருடம். ட- 5.20 கோடி வழக்குகள் உங்கள் அநீதிமன்றத்தில் இன்றைய கணக்கின் படி. இதை நீங்கள் முதலில் திருத்திக்கொண்டு பிறகு மற்றவர்களுக்கு அறிவுரை கூறவும்


கனோஜ் ஆங்ரே
நவ 13, 2024 17:25

பாகிஸ்தானியே எரியுதா...? எரியட்டும், எரியட்டும்...?


Anand
நவ 13, 2024 16:20

தீவிரவாதி, ஊழல் பேர்வழி, கொள்ளையன், தேசத்துரோகி, அந்நிய கைக்கூலி, அடுத்தவன் சொத்தை ஆட்டைய போட்டவன், கொலைகாரன் போன்ற சமூக விரோதிகளுக்கு கீழமை நீதிமன்றங்கள் தண்டனை வழங்கினாலும் நீங்கள் ஜாமீன்/விடுதலை கொடுத்துக்கொண்டே இருங்கள், நாடு விளங்கிடும்...


கத்தரிக்காய் வியாபாரி
நவ 13, 2024 16:18

இந்தமாதிரி தீர்ப்பெல்லாம் உடனடியாக குடுத்து விடுவார்கள் நீதிமான்கள். ஏனென்றால் அப்புறம் இவர்களுக்கு வேலை இருக்காது. இதே கொடூரமான கொலை குற்றம் செய்து தக்க ஆதாரத்துடன் செல்கிற வழக்குக்கு முப்பது வருடம் ஆகி கொலையாளியே இயற்க்கை மரணம் ஆகி விடுவான்.


Anbuselvan
நவ 13, 2024 15:47

இந்த நாட்டில் இருபது முப்பது வருடங்களாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வருட கணக்காக தீர்ப்பு சொல்ல படாமல் இருக்கிறது. தீர்ப்பு வரும் வரை அரசு இயந்திரங்கள் காத்து இருக்க வேண்டும் என்கிறீர்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை