உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

புதுடில்லி : வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதியாக இருந்த நிலையில், ஐ.டி.ஆர்., படிவங்கள் மற்றும் இணையதளங்களில் மாறுதல்கள் நடப்பதால் கால அவகாசத்தை செப்டம்பர் 15 வரை நீட்டிப்பதாக வருமான வரித் துறை நேற்று அறிவித்தது.நிதியாண்டு 2024 - - 25க்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய, ஜூலை 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் வருமான வரி படிவங்களில் விரிவான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: வருமான விபரத்தை துல்லியமாக தெரிவிக்க வசதியாகவும், எளிதான செயல்முறைக்கும் வருமான வரி படிவங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப இணையதளத்திலும் மாற்றங்கள் மற்றும் சோதனைகள் நடந்து வருகின்றன. எனவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்., 15க்கு மாற்றியுள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை