உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஷ்யா செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

ரஷ்யா செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் 21ம் தேதி ரஷ்யா செல்ல உள்ளார். அங்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளார்.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ரஷ்யா சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். தொடர்ந்து, விளாடிமிர் புடின் விரைவில் இந்தியா வர உள்ளார் என்றார்.இச்சூழ்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 21ம் தேதி மாஸ்கோ செல்ல உள்ளார். அங்கு, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவை சந்தித்து பேச உள்ளார். அமெரிக்கா வரி விதித்துள்ள சூழ்நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

mathavan
ஆக 13, 2025 19:35

ஒரு பேரல் கச்சா எண்ணையை $ 265 டாலருக்கு வாங்கும்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபான்னு வித்தானுங்க, இப்போ 65 டாலருக்கு ரஷ்ய ல இருந்து வாங்கும்போது 30 ரூபாக்குத்தானே விக்கணும்,?


MARUTHU PANDIAR
ஆக 13, 2025 20:21

ஏ மஹா மேதையே, என்ன ஒரு கணக்கு என்ன ஒரு லாஜிக்கு அசத்துற போ ஒரேயடியா 20 கிலோ இலவச அரிசி, அடி மாட்டு விலையில் பாம் ஆயிலு, பருப்பு , டெட் சீப்பா ரயில் சீசன் டிக்கெட்டு, உனக்கு ,ஒன்னப்போல உள்ள 200 களுக்கு அந்நிய / பகைவனிடமிருந்து பாது காப்பு, சுதந்திரம் அதுக்கு தேவையான ராணுவ , பாதுகாப்பு செலவு இதெல்லாம் எவன் அப்பன் வீடு பணத்துலருந்து கிடைக்கும்னு சொன்னா தேவலை. அத்தோடு உங்க இத்தாலி அரசு சுமத்திட்டுப்போன பல்லாயிரக்கணக்கான கச்சா எண்ணெய் கடனை யார் அப்பன் வீட்டு பணத்துல இந்த அரசு அடைத்ததுன்னும் சொன்ன தேவலை. சொல்றயா?


vivek
ஆக 13, 2025 20:28

அறிவிலி காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் பாண்ட் கடன் பற்றி தெரியுமா....அந்த கடனை எவன் அடைப்பான்...பிஜேபி அடைக்குது


sankaranarayanan
ஆக 13, 2025 18:44

இவர்கள் சந்திப்பிற்கு பிறகு அமெரிக்க அதிபதி டிரம்பு 50சதவீதத்தை 100 சதவீதமாக ஆக்கிவிடுவார்


vivek
ஆக 13, 2025 20:29

சங்கரா உன் வாயை கழுவு


ஆனந்த்
ஆக 13, 2025 18:34

அமெரிக்காவுக்கு எதிராக பிரிக்ஸ் நாடுகளை ஒன்று சேர்க்க வேண்டும்.