உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலி துாதரின் 162 நாட்டுப்பயணம்,ரூ.300 கோடி மோசடி: அதிரடிப் படை போலீசார் அதிர்ச்சி

போலி துாதரின் 162 நாட்டுப்பயணம்,ரூ.300 கோடி மோசடி: அதிரடிப் படை போலீசார் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஸியாபாத்: போலி துாதரகம் நடத்திய ஹர்ஷவர்தன் ஜெயின், 2005ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டுவரையில் 162 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ரூ.300 கோடி மோசடி செய்ததை உத்திரபிரதேச சிறப்பு அதிரடி படை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.உ.பி., மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷவர்தன் ஜெயின் என்பவர், உத்தர பிரதேசத்தின் காஸியாபாத்தில் போலி துாதரகம் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற சிறப்பு போலீசார், ஆடம்பர கார்களுடன் வலம் வந்த அவரை கைது செய்தனர்.இவர், உலகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத நாடுகளின் துாதர் என்று கூறிக்கொண்டு, பலரையும் ஏமாற்றியுள்ளார். யாருமே கேள்விப்படாத நாடுகளின் பெயரில் துாதரகம் அமைத்துக் கொண்டு வேலை வாங்கித்தருவதாகவும், வர்த்தகம் ஏற்பாடு செய்வதாகவும் கூறி பலரையும் மோசடி செய்துள்ளார்.இவர், 162 நாடுகளுக்கு பயணம் செய்ததும், 25 போலி நிறுவனங்கள் நடத்தியதும், ரூ.300 கோடி மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. அவர், 2005 மற்றும் 2015 க்கு இடையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 54 முறையும், இங்கிலாந்துக்கு 22 முறையும் சென்றுள்ளார். இந்த விவரங்களை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஹர்ஷ்வர்தன் ஜெயினை காவலில் வைக்க எஸ்.டி.எப் நீதிமன்றத்தை அணுகியுள்ளது, நாளை விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விசாரணையில் அவரது உலகளாவிய பல மோசடிகள் வெளிப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venugopal s
ஜூலை 28, 2025 12:35

வெளிநாட்டு பயணத்தில் நமது பிரதமருடன் போட்டி போடுகிறாரே!


shyamnats
ஜூலை 29, 2025 08:17

இவர் மாதிரி கொத்தடிமைகள் இருக்கும் வரை விடியல் ஆட்சிக்கு பங்கமில்லை. காந்தியின் பொம்மைகள் போல கண்ணையும் காதையும் மட்டும் மூடியுள்ள அமைப்புகள். யாரை யாருடன் ஒப்பீடு ?


ராமகிருஷ்ணன்
ஜூலை 28, 2025 11:05

ஆளை பார்த்தால் திமுககாரன் மாதிரியே இருக்கான். அதான் இப்படி


shyamnats
ஜூலை 28, 2025 07:54

இவரது திறமையை மாநில அரசுகள், அரசியல் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


Natarajan Ramanathan
ஜூலை 28, 2025 00:42

மோடி அரசு வராவிட்டால் இவன் இன்னும் எத்தனை ஆண்டுகள் இப்படி வாழ்ந்திருப்பானோ


Senthoora
ஜூலை 28, 2025 07:18

நீங்க என்ன சொல்லவாறீங்க, மோடி ஆட்சிக்கு வந்து 12 வருஷமாச்சு, அதுவரை என்ன பண்ணினீங்க, மற்றவர்களை குறை கூறாமல், தப்புக்கு தண்டனை, மீண்டும் இது நடக்காமல் பாருங்க, 2005 இல் எந்த மாநில அரசு எந்த கட்சி இருந்தது இவர் குற்றம் செய்யும்போது என்று பாருங்க.


Natarajan Ramanathan
ஜூலை 27, 2025 22:55

அதைவிடவா?


Anantharaman Srinivasan
ஜூலை 27, 2025 21:02

ஹர்ஷவர்தன் ஜெயின் உண்மையிலேயே பலே கில்லாடி. அரசியல்வாதிகள் இவனிடம் training எடுக்கணும். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 54 முறை போயும் எங்கேயும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்திருக்கிறானே.


Senthoora
ஜூலை 28, 2025 07:20

உண்மையிலே இவரிடம் ஒன்றிய அரசை கொடுக்கணும். சிறப்பாக ஆட்சி நடத்துவார்.


Anantharaman Srinivasan
ஜூலை 27, 2025 20:56

போலி துாதரின் 162 நாட்டுப்பயணம்,ரூ.300 கோடி மோசடி: சபாஷ்..ஹர்ஷவர்தன் ஜெயின், 2005ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டுவரையில் செய்த மோசடிகளை10 ஆண்டுகள் கழித்து 2025 ம் ஆண்டு முடிவதற்குள் கண்டுபிடித்ததை பாராட்ட வேண்டும்.


முக்கிய வீடியோ