உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டர்: சிறுவன் பரிதாப பலி

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டர்: சிறுவன் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில், போலி டாக்டர் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ததால் 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.பீஹார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(15), உடல்நலக்குறைவால் அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். இதனால், பெற்றோர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த டாக்டர் அஜித் குமார், சிறுவனுக்கு பித்தப்பையில் கல் உள்ளதாக கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவர் யூடியூப் சமூக வலைதளத்தை பார்த்து அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இதனால், சிறுவன் உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து பாட்னாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சை வரவழைத்துள்ளார். அதற்குள் சிறுவன் உயிரிழந்தார். டாக்டர் மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக தப்பிச் சென்றனர்.இது குறித்து சிறுவனின் பெற்றோர் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதித்ததும் கிருஷ்ணகுமார் வாந்தி எடுப்பதை நிறுத்திவிட்டார். ஆனால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர் கூறினார். அதற்கு நாங்கள் ஒப்புக் கொண்டதும் அவர் யூடியூப்பை பார்த்து அறுவை சிகிச்சை செய்தார். பிறகு, அவர் உயிரிழந்தார். அவர் டாக்டருக்கு படித்தாரா என தெரியவில்லை. அவர் போலி டாக்டர் என எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். தலைமறைவான டாக்டரை தேடி வருகின்றனர். அங்கு ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களும் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

N Annamalai
செப் 09, 2024 05:44

சோகம் .தண்டிக்க பட வேண்டும் அந்த போலி மருத்துவரை .


rsudarsan lic
செப் 08, 2024 21:12

செந்திலை பாலாஜியை கவனிக்கவே நேரம் சரியா இருக்கு. இதுல சுகாதார துறைக்கு கட்டளை இட, கலெக்டர் கமிஷனர் களுக்கு கட்டளை இட எங்கே நேரம்? அவனவன் விதி, சாக வேண்டியது, அவளவள் விதி..... துன்புறுத்தப்பட்டு சாக வேண்டியது. ஜாதி வசதிப்படி தண்டனையோ,பெயில், நஷ்ட ஈடு, நாடு தழுவிய போராட்டம் எல்லாம் நடக்கும். நீதியும் இல்லை நிர்வாகமும் இல்லை


சமூக நல விரும்பி
செப் 08, 2024 16:19

இன்னும் தெரியாமல் எத்தனை பேர் இருக்கிறார்களோ


Nandakumar Naidu.
செப் 08, 2024 15:39

அந்த போலே டாக்டருக்கு உடனடியாக கடுமையான மரண தண்டனை விதிக்க வேண்டும். துடித்துடித்து சாகவேண்டும் அவ்வாறான மரண தண்டனை விதிக்க வேண்டும்.


முக்கிய வீடியோ