உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவ்காம் குண்டுவெடிப்பு சம்பவம்... தவறை ஒப்புக்கொண்டார் பரூக் அப்துல்லா

நவ்காம் குண்டுவெடிப்பு சம்பவம்... தவறை ஒப்புக்கொண்டார் பரூக் அப்துல்லா

ஸ்ரீநகர்: நவ்காம் போலீஸ் ஸ்டேஷனில் வெடிபொருட்கள் வெடித்து சிதறிய சம்பவம் 'எங்களின் தவறால் நடந்துவிட்டது' என்று ஜம்மு காஷ்மீரின் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் தந்தையும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நவ்காம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று திடீரென வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில், 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறுவது இடம் பெற்றுள்ளது. பரிதாபாத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை கையாளும் போது விபத்து நிகழ்ந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சில ரசாயனங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து பேசிய ஜம்மு காஷ்மீரின் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் தந்தையும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, இது தங்களின் தவறு என்று கூறியுள்ளார். அவர் கூறியதாவது; இது எங்கள் தவறுதான். இந்த வெடிபொருட்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களுடன், அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து முதலில் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். இதன் விளைவாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளுக்கும் சேதமாகியுள்ளது. டில்லியில் நடந்த சம்பவத்தில் இருந்து நாங்கள் இன்னும் வெளியே வரவில்லை. அங்கு காஷ்மீரைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கை காட்டப்படுகிறார்கள். நாங்கள் இந்தியர்கள், இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் நாள் எப்போது வரும்?. இந்த டாக்டர்கள் ஏன் இந்த பாதையைத் தேர்ந்தெடுத்தனர். என்ன காரணம்?, இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

K V Ramadoss
நவ 15, 2025 21:48

யாரையோ காப்பாற்ற தவறு எங்களதுதான் என்று சொல்கிறாரோ ? அந்த மெடிக்கல் காலேஜ் ஏற்பட்டதே கேள்விக்குரியது.. திட்டம் போட்டே, வெளிநாட்டு பணத்தை வைத்துக்கொண்டு இந்த காலேஜ் உருவாக்கப்பட்டது ... அதன் நோக்கமே யாரும் சந்தேகப்படாமல் சதிக்கூட்டத்தை, பயங்கரவாதிகளை மெடிக்கல் காலேஜிலேயே உருவாக்குவது ..பயங்கரவாதிகளை டாக்டர்கள் ஆக்கியிருக்கிறார்கள்.. டாக்டர்களை பயங்கரவாதிகளாக அல்ல ....


NARAYANAN
நவ 15, 2025 18:57

ஐயா பெரியவரே இவர்கள் டாக்ட்டர்கள் என்று போர்வை போதாதீர்கள்.அரக்க குணம் கொண்டயர் என்பதை முதலில் மனதார ஒப்புக்கொள்ளுங்கள்.இத்தகைய குற்றவாளிகளை வளர்த்து ஆளாகியதே நீங்கள் தானே.நடிப்பு எதெற்கு. .


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
நவ 15, 2025 18:55

சான்றுகள் அழிந்தது , இனி பக்கி மேல் பழி போட வேற ஏதாவது கிடைக்குதன்னு nia தேடட்டும்


Sun
நவ 15, 2025 18:09

இவர்கள் அங்கு ஆட்சியில் இருக்கும் வரை வெடி குண்டு சத்தம் அங்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கும். இவர் ஏன் பேட்டி கொடுக்கிறார்? மாநில முதல்வர் ஓமர் அப்பதுல்லாதானே இது குறித்து கருத்து சொல்ல வேண்டும்.இவர் சொல்வதைப் பார்த்தால் வெடி குண்டு நிபுணர்களை கலந்து ஆலோசிக்காமலே மாநில அரசு இதனைக் கையாண்டிருக்கிறது. கஷ்டப் பட்டு வெடிகுண்டை கண்டுபிடித்தவர்களுக்கு பரிசாக மாநில அரசு ஒன்பது உயிர்களை பலி கொடுத்திருக்கிறது. இனியும் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் மாநில அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.


ஆரூர் ரங்
நவ 15, 2025 17:00

குற்ற சதி நடந்ததற்கான முக்கிய( வெடி பொருள்) ஆதாரங்களை அழித்து விட்டு நாடகம் நடத்துகின்றனர். அங்கெல்லாம் நிரந்தர ராணுவ ஆட்சிதான் சரிப்பட்டு வரும். (குடும்ப பரம்பரை ஆட்சிகளை அனுமதித்ததன் பலன்?)


மேலும் செய்திகள்











புதிய வீடியோ