உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் மாதிரி தேர்வில் மார்க் குறைந்ததால் மகளை அடித்து கொன்ற தந்தை

நீட் மாதிரி தேர்வில் மார்க் குறைந்ததால் மகளை அடித்து கொன்ற தந்தை

சாங்கிலி: மஹாராஷ்டிராவில், 'நீட்' மாதிரித்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த பிளஸ் - 2 மாணவியை, தந்தையே பிரம்பால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மஹாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டத்தின் அட்பாடி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி முதல்வர் தொண்டிராம் பக்வான் போன்ஷ்லே, 50. இவரது மனைவி ப்ரீத்தி.இந்த தம்பதியின் மகள் சாதனா, 17. பத்தாம் வகுப்பில், 92 சதவீத மதிப்பெண்கள் பெற்று தற்போது பிளஸ் - 2 படித்து வந்தார். இந்நிலையில், மருத்துவ படிப்பில் சேர விரும்பி நீட் தேர்வுக்கு தயாரானார்.இதையடுத்து, கடந்த 20ம் தேதி நடந்த நீட் மாதிரித்தேர்வில் சாதனா குறைந்த மதிப்பெண் எடுத்ததால், அவரை தந்தை போன்ஷ்லே பிரம்பால் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த சாதனாவை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சாதனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாய் ப்ரீத்தி புகார் அளித்ததை அடுத்து, தந்தை போன்ஷ்லேவை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Amirthavalli N
ஜூன் 26, 2025 20:15

Parents must treat children in kind way with affection. Should not impose their opinion on them. Must give and take respect.


Saai Sundharamurthy AVK
ஜூன் 25, 2025 23:00

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.


அப்புசாமி
ஜூன் 25, 2025 08:14

இங்கே தற்கொலை. அங்கே அடித்துக் கொலை. சாவுறவங்க எல்லாரும் பெண்கள். இந்த லட்சணத்துல உலகத்தை வழிநடத்தப் போறாங்களாம்.


MANNAI RAAJ
ஜூன் 25, 2025 08:04

நல்லவேளை தமிழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை இதுதான் சாக்கு என்று போராளிகள் களம் இறங்குவார்கள்.


R.RAMACHANDRAN
ஜூன் 25, 2025 07:53

நாட்டில் சுயநலத்திற்காக உயிருடன் கொல்லும் குற்றவாளிகள் அதிகமாகிக் கொண்டுள்ளனர்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 25, 2025 05:30

தமிழக நீட் பேராளிகளுக்கு நல்ல சான்ஸ், எழவு அரசியலில் புகழ்பெற்ற திமுகவுக்கு வேலை வந்து விட்டது. 200 ரூபாய் ஊபிஸ் வரிசையில் வாங்க


Kasimani Baskaran
ஜூன் 25, 2025 03:43

மகளுக்கு பதிலாக இனி அப்பா நீட் எழுதலாம்..


Nandakumar Naidu.
ஜூன் 25, 2025 03:10

மனிதனா இவன்? இவனையும் அதே போல அடித்துக்கொல்ல வேண்டும்.


முக்கிய வீடியோ