உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான்கு மகன்களுடன் ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை

நான்கு மகன்களுடன் ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை

பரிதாபாத்: ஹரியானாவின் பரிதாபாதில் ஓடும் ரயில் முன், நான்கு மகன்களுடன் தந்தையும் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.பீஹாரை சேர்ந்த தொழிலாளி மனோஜ் மஹோதா, 45. இவர் ஹரியானாவின் பரிதாபாதில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு பிரியா என்ற மனைவியும், பவான், 10, கரு, 9, முர்ளி, 5, சோட்டு, 3, என நான்கு மகன்கள் இருந்தனர். இந்நிலையில், மனைவி பிரியா நடத்தையில் சந்தேகமடைந்த மனோஜ் அடிக்கடி அவரிடம் சண்டையிட்டுள்ளார். நேற்று முன்தினம் மதியம் வழக்கம்போல் சண்டையிட்ட மனோஜ், பிள்ளைகளை பூங்காவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி சென்றார். வழியில் குழந்தைகளுக்கு சிப்ஸ், குளிர்பானங்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். பின் தண்டவாளம் அருகேயுள்ள பாலத்தின் கீழ் மனோஜ் நான்கு மகன்களுடன் நின்றிருந்தார். துாரத்தில் ரயில் வருவதை கண்டதும், நான்கு மகன்களையும் இறுக பிடித்தபடி தண்டவாளம் நடுவே நின்றார். ரயில் வருவதை கண்டு, நான்கு மகன்களும் கதறி துடித்தனர். அவர்களை ஓடிவிடாதபடி மனோஜ் இறுகப் பிடித்துக் கொண்டார். மும்பையில் இருந்து வந்த, கோல்டன் டெம்பிள் எக்ஸ்பிரஸ் ரயில், ஐந்து பேர் மீது மோதியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தகவல் அறிந்து வந்த போலீசார் ஐந்து பேரின் உடல்களை மீட்டனர். மனோஜின் சட்டை பையில் இருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில், மனைவியின் மோசமான நடத்தையால் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ