உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரபல பாடகர் வேடன் மீது பெண் மருத்துவர் பாலியல் புகார்; போலீசார் வழக்குப்பதிவு

பிரபல பாடகர் வேடன் மீது பெண் மருத்துவர் பாலியல் புகார்; போலீசார் வழக்குப்பதிவு

கொச்சி: கேரளாவில் பிரபல ராப் பாடகர் வேடன் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்Fப்பதிவு செய்துள்ளனர். பிரபல ராப் பாடகரான வேடன் என்று அழைக்கப்படும் ஹிரன்தாஸ் முரளி என்பவர் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள குத்தந்திரம் பாடலின் மூலம் மிகவும் பிரபலமானார். அடக்குமுறைகளுக்கு எதிரான பாடல்களின் மூலம், தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். அண்மையில் புலி பல் சர்ச்சையில் சிக்கிய இவர் மீது தற்போது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பெண் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது; நான் வேடனின் ரசிகை. டாக்டர் தொழில் செய்து வருகிறேன். என்னுடன் வேடனுக்கு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. கோழிக்கோட்டில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் சமூக வலைதளப் பதிவு குறித்து பேசுவதற்காக சென்ற போது முதல்முறையாக, என்னை வேடன் பாலியல் வன்கொடுமை செய்தார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 2021ம் ஆண்டு முதல் 2023 வரையில் தொடர்ச்சியாக பலமுறை பலாத்காரம் செய்தார். பின்னர் என்னை ஏமாற்றி விட்டார். மேலும், என்னிடம் பணமும் பெற்றுள்ளார், எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் கொச்சி திருக்காக்கரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Senthoora
ஜூலை 31, 2025 13:23

தேர்தல் நெருங்குகிறது, இவர் இருந்தால் ஒருகட்சி இவரை வாக்கு வங்கிக்காக பயன் படுத்தும், கொஞ்சநாளைக்கு உள்ளேதள்ளிவிடலாம் என்று பிளான் போட்டிருக்குபோல. இப்போ வேடன் சொல்லட்டும், சினிமா படத்தில் வருவதுபோல, நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று. டாக்டர் ஊரைவிட்டே ஓடிடுவாங்க.


P. SRINIVASAN
ஜூலை 31, 2025 14:48

சரியாக சொன்னீர்கள்.. இது அரசியல்


N.Purushothaman
ஜூலை 31, 2025 12:23

அடடே ..மருத்துவரையே அடக்கி வேலை பாத்துட்டான் போல ...


Ganapathy
ஜூலை 31, 2025 12:19

ஒரு வருடமாக இவரும் ஏமாந்து கொண்டே இருந்தாரா? ஏன் உடனே போலீஸுக்கு போகவில்லை? இருவரும் உடன்படாமல் இத்தனைநாள் உடலுறவு சாத்தியமில்லை. இது கோர்ட்டுக்கு வந்தால் இவருடைய வழக்கு நீர்த்துப்போகும்.


Premanathan S
ஜூலை 31, 2025 10:12

பெண் டாக்டர் சாதாரண ஆளிடம் ஏமாந்தாரா? நம்ப முடியவில்லை


Senthoora
ஜூலை 31, 2025 13:26

அவர் வேடன், வேட்டையாடிவிட்டாராம் என்று சொல்லுது அந்த படித்த டாக்டர்.