உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை: ஜனவரி முதல் இதுவரை 213 பேரை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை!

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை: ஜனவரி முதல் இதுவரை 213 பேரை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜனவரி மாதம் முதல் இதுவரை 213 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி உள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட்டுகளை ஒழிக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜூன் 20) கான்கர் மாவட்டத்தில், நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், பெண் நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து, வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இது குறித்து, கான்கர் மாவட்ட எஸ்.பி., கல்யாண் எலெசேலா கூறியதாவது: பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்திய இடத்திலிருந்து, பெண் நக்சலைட் உடல் மீட்கப்பட்டுள்ளது.அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஜனவரி முதல் இதுவரை நக்சலைட்டுகள் 213 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

A1Suresh
ஜூன் 20, 2025 16:36

நக்சலைட்டுகள் சீனாவில் இருப்பதில்லை ஏனோ


V Venkatachalam
ஜூன் 20, 2025 21:07

சீனா எப்பவோ சர்வாதிகார நாடா ஆயிடுச்சே.. அங்கே எவனுமே வாலாட்ட முடியாது.‌வால ஒட்ட நறுக்குறதெல்லாம் அங்க கிடையாது. அதுக்கு பதிலா ஆளை காணாமல் ஆக்கிப்புடுவாங்க. இந்தியாவில் மோடி மென்மையாக இருக்கிறார் என்று இந்த கான்கிராஸ் வால் பிடிக்குறவன்களுக்கு நல்லாவே தெரியும்.


Manaimaran
ஜூன் 20, 2025 15:48

நல்ல செயல ஆனால் : ஆர்வலர்னு எவனாவது கிளம்புவான் பாருங்க


முக்கிய வீடியோ