உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள்; தீபாவளிக்கு அறிவித்தது ரயில்வே!

6 ஆயிரம் சிறப்பு ரயில்கள்; தீபாவளிக்கு அறிவித்தது ரயில்வே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.பண்டிகை காலம் என்றாலே சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக, ரயில்வே ஸ்டேஷனை நோக்கி தான் மக்கள் படையெடுப்பார்கள். இதற்கு காரணம் குறைவான கட்டணம் தான். பஸ், விமான சேவையை ஒப்பிடுகையில் ரயிலில் சென்றால் குறைவான பணம் தான் செலவாகும். இதனால் பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் பண்டிகைகள் வரிசை கட்டி வருகிறது. அக்டோபர் 9ம் தேதி துர்கா பூஜை, அக்டோபர் 11, 12ம் தேதி சரஸ்வதி பூஜை, விஜயதசமி, அக்டோபர் 31ம் தேதி தீபாவளி, நவம்பர் மாதம் வட மாநிலங்களில் பிரபலமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் வர உள்ளன. இந்த பண்டிகை காலத்தில், வெளியூர்களில் தங்கி இருக்கும் பலர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். இதனால் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.இந்நிலையில், 'ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் பயணிகளுக்கு சுமூகமான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஆரூர் ரங்
அக் 01, 2024 14:29

பயங்கரவாதத் தலைவன் மரணத்துக்கு ஃபிளக்ஸ் வைத்து ஊர்வலம் நடத்தி கோஷம் போட்டால் திராவிஷ அரசுக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் தேசப்பற்றையே உயிர்மூச்சாக வைத்துள்ள ராஷ்ட்ரீய சுயம் சேவக் தொண்டர்கள் ஊர்வலம் போனால் எரிகிறது. காரணம் இப்போ நடப்பது பிரிவினைவாத கட்சியின் ஆட்சி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை