உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அலங்காரத்துடன் சபரிமலை வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

அலங்காரத்துடன் சபரிமலை வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை : சபரிமலை வரும் வாகனங்களை உருவ மாற்றம் செய்து அலங்கரித்து வரக்கூடாது என கேரள மாநில மோட்டார் வாகன போக்குவரத்து துறை அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர். அவ்வாறு வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில வாகனங்களுக்கு, 5,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.சபரிமலை வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை பல்வேறு வகையில் அலங்கரித்து வருகின்றனர். வாழைக்குலை, இளநீர் போன்றவற்றை கட்டியும், வாகனத்தை பல்வேறு கோவில்களின் மாதிரி வடிவமைத்தும் வருகின்றனர். இவ்வாறு வரும் வாகனங்களை எதிரே வரும் வாகனங்களின் டிரைவர்கள் ஒரு நிமிடம் திரும்பி பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.சபரிமலை பாதைகள் வளைவுகள் நிறைந்தவை. பக்கவாட்டில் மிக ஆழமான பள்ளங்களும் உள்ளன. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களால், பிற டிரைவர்களின் கவனம் திசை திரும்பினால் பெரிய விபத்து ஏற்படும் என, கேரள மாநில வாகன போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.மேலும், அதிக சத்தத்துடன் கூடிய ஒலிபெருக்கியை அமைத்து பாடல்களை ஒலிபரப்பி வருவது, கண்கவர் விளக்குகளால் அலங்கரித்து வருவது போன்றவை, வனவிலங்குகளையும் பாதிக்கிறது. வாழைக்குலை, இளநீர் குலை போன்றவை வனவிலங்குகளை கவர்ந்திழுக்கும்.எனவே, இப்படிப்பட்ட செயலில் ஈடுபட வேண்டாம் என்று, மோட்டார் வாகனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுத்தாலும், ஏராளமான வாகனங்கள் இவ்வாறு தொடர்ந்து வருகின்றன. விதவிதமான அலங்காரங்களுடன் வரும் வாகனங்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்களுடைய வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வேறு வாகனங்களில் பக்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மோட்டார் வாகனத்துறை சபரிமலை பாதைகளில் தொடங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Palanisamy T
டிச 23, 2024 08:19

வாகனங்களை பறிமுதல் செய்வது சிறந்த நடவடிக்கை. அபராதம் போட்டாலும் மாற மாட்டார்கள். சில பக்தர்கள் குறிப்பாக வெளியூரிலிருந்தது வருகின்றவர்கள் காலணியில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். உண்மையான பக்தி உள்ளத்திலிருந்தால் போதும். அதை இப்படி வெளிப்படுத்துவது நன்றல்ல. மற்றவர்கள் இதை பக்தியாக பார்க்கமாட்டார்கள். உண்மையானவர்கள் சைவ நூட்களை அதிகம்படித்து சைவத்தின் பெருமைகளை தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உள்ளத்தில் தூய்மையும் பக்தியும் அன்பும் மலரும.சைவ வழிப்பாடும் மேம்படும். நல்ல மாற்றங்களை காணலாம்.


R.RAMACHANDRAN
டிச 23, 2024 07:36

ஆணவம் மிக்க கபட வேடதாரிகள் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தவே உள்ளனர்.அவர்கள் சட்டங்களை மதிப்பது இல்லை.


Palanisamy T
டிச 23, 2024 09:01

கொஞ்சம் கடுமையாக பேசியுள்ளீர்கள். வரவேற்கத் தக்கது. ஐயப்பன் மாலை போட்டுவிட்டேன், கறிச் சோறுப் பக்கம் பார்க்க மாட்டேன் என்பார்கள். விரதம் முடிந்த பின்பு அவர்களை போல் கறிச் சோறு உணவு உண்ணமுடியாது. இது உண்மையான பக்தியில்லை. நாம் அதிகமாக சைவ சமய நூட்களை படித்து நம் சமயத்தின் மேன்மையையும் உயர்வையும் தெரிந்துக் கொள்ள வேண்டும். அதுதான் நாம் கடவுளிடம் காட்டும் உண்மையான அன்பு அது உண்மையான வழிப்பாடு. தமிழும் வளரனும் தமிழும் மலரனும் நாமும் வளர்வோம் நாமும் உயர்வோம். காலம் நமக்கு நல்ல மாற்றங்களை கொண்டு வரும். இதையெல்லாம் நாம் என்றோ தவறவிட்டு விட்டோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை