அரசு பணிமனையில் பஸ்சில் தீ விபத்து
ரோஹிணி: செக்டார் 37ல் டில்லி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஒரு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது.ரோஹிணியின் செக்டார் 37ல் டில்லி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. இங்கிருந்து நேற்று காலை 9:48 ஒரு பஸ், வழக்கமான பணிக்காக புறப்பட்டு வெளியேறிக் கொண்டிருந்தது.அப்போது திடீரென பஸ் தீப்பிடித்து எரியத் துவங்கியது. அந்த நேரத்தில் பயணியர் யாரும் இல்லை. தீயை பார்த்ததும் ஓட்டுநர், பஸ்சை நிறுத்திவிட்டு, கீழே குதித்து உயிர் தப்பினார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. தீயை அணைத்து மற்ற வாகனங்களுக்கு தீ பரவாமல் தீயணைப்புப் படையினர் கட்டுப்படுத்தினர்.தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.