உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவராத்திரி முதல்நாள்; மாதா திரிபுர சுந்தரி கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்

நவராத்திரி முதல்நாள்; மாதா திரிபுர சுந்தரி கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அகர்தலா: திரிபுராவில் உள்ள மாதா திரிபுர சுந்தரி கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். நவராத்திரியின் முதல் நாளிலேயே பிரதமர் இக்கோவிலுக்கு சென்றுள்ளார். திரிபுராவின் கோமதி மாவட்டத்தின் உதய்பூர் நகரில் அமைந்துள்ள பழமையான 51 சக்தி பீடங்களில் ஒன்று மாதா திரிபுர சுந்தரி கோவில். நவராத்திரி முதல் நாளான இன்று பிரதமர் மோடி இந்தக் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆன்மிக கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். தொடர்ந்து, மாதா திரிபுர சுந்தரி கோவில் வளாகத்தின் வளர்ச்சிப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புதிய நடைபாதைகள், புதுப்பிக்கப்பட்ட நுழைவாயில்கள், வடிகால் அமைப்பு, கடைகள், தியான அறை, விருந்தினர் தங்குமிடங்கள் ஆகியவை அடங்கிய மூன்று அடுக்கு கட்டடத்தை திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rathna
செப் 22, 2025 18:23

நமது கலாச்சாரத்தை தூக்கி பிடிப்பதில் அவருக்கு இணை அவர்தான். அன்னை உலகத்திற்கு, அவருக்கும் நன்மையை அருளட்டும்.


அசோகன்
செப் 22, 2025 17:45

இதுவரை காங்கிரஸ் பிரதமர்கள் ஹிந்து கோவிலுக்குள் செல்வதையே அசிங்கம் என மற்ற மதங்களுக்கு சொம்பு தூக்கினார்கள்...... எங்கள் மோடிஜி கம்பீரமாக பல கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்கிறார்...... அவரை இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இந்தியாவை வல்லரசாக மற்ற தெய்வங்கள் ஆசீர்வாதிக்கவேண்டும்


Balasubramanian
செப் 22, 2025 17:41

பொது அறிவு வினா! இன்று பிரதமர் என்ன உணவு அருந்தினார்? - பதில் - நவராத்திரி முழுவதும் நீரை தவிர வேறு ஆகாரம் எடுத்துக் கொள்ள மாட்டார்! -


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை