உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு ஒரே தேர்தல்; இன்று கூடுகிறது முதல் பார்லி கூட்டுக்குழு; முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல்; இன்று கூடுகிறது முதல் பார்லி கூட்டுக்குழு; முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக, முதல் ஆலோசனை கூட்டத்தை இன்று (ஜன.,08) பார்லி கூட்டுக்குழு நடத்துகிறது. கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஏதுவாக அரசியலமைப்பு 129வது திருத்த மசோதா டிச.17ம் தேதி லோக்சபாவில் தாக்கலானது. யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதாவும் அன்றே தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா பார்லி. கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. மொத்தம் 39 உறுப்பினர்கள் கொண்ட பார்லி. கூட்டுக்குழு இன்று (ஜன.,08) முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது. கூட்டம் காலை 10.30 மணிக்கு கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. கூட்டத்தில் சட்டத்துறை செயலாளர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்தும், அதனால் நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைக்ககூடிய பலன்கள் குறித்தும் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்க உள்ளனர்.பார்லி. கூட்டுக்குழுவில் 12 ராஜ்யசபா உறுப்பினர்கள், 27 லோக்சபா உறுப்பினர்கள் என மொத்தம் 39 பேர் உள்ளனர். காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா குழுவின் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ghee
ஜன 08, 2025 15:55

இந்த திராவிட கொத்தடிமைகள். ஒண்ணுமே தெரியாம ரொம்ப பொங்குவானுவ


Sampath Kumar
ஜன 08, 2025 10:22

இதன் பின்னால் ஒளிந்து உள்ள திட்டம் பிஜேபி காரன் தொடர்ந்து 4 முனையாக ஆட்சியை பிடிக்க திட்டமே நாட்டில் சட்டத்தை ...தேர்தல் அறிவிப்பு செய்து இந்த வருடமே நடத்தி விடுவார்கள் அம்புட்டும் கிரிமினல்கள்


சிவம்
ஜன 08, 2025 10:52

கிரிமினல்களா.. அப்ப காங்கிரஸ் காரன் யாரு. நம்ம நாட்டு கரன்சிய அச்சடிக்க ...க்கு விற்றவர் உத்தமரா? இத்தாலி விசுவாசி, நேரு குடும்பத்து வாரிசுகள், இந்தியாவை வெளிநாடுகளில் காட்டிக் கொடுக்கும் இவர்களெல்லாம், தேச பக்தர்களாக? போவியா ...!


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 08, 2025 09:50

முதல் கூட்டமாம், முடிவு எடுப்பாங்களாம். நம்பிட்டோம். ஹிம்... ஏதோ தர்மத்துக்கு ஒரு செய்தி.


Mettai* Tamil
ஜன 08, 2025 09:21

ஒரே நாடு ஒரே தேர்தல் .......வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை