உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: இன்றும் 5 பள்ளிகளில் சோதனை

டில்லியில் பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: இன்றும் 5 பள்ளிகளில் சோதனை

புதுடில்லி: டில்லியில் உள்ள 5 பள்ளிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 21) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளியில் போலீசார் சோதனை நடத்தியதில் புரளி என்பது உறுதியானது.டில்லியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. டில்லியில் உள்ள 5 பள்ளிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 21) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மிரட்டல் வந்த அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவ - மாணவியர் வெளியேற்றப்பட்டனர். அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பதற்றம் உருவானது. பெற்றோர் அலறி அடித்துக் கொண்டு, பள்ளிகளை நோக்கி ஓடினர். அனைத்து பள்ளிகளுக்கும் தீயணைப்பு படையினர், வெடிகுண்டு செயலிழப்பு படையினர், போலீசார் விரைந்தனர். தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. பள்ளியின் ஒவ்வொரு அங்குலமும் சோதனை செய்யப்பட்டது. எனினும் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை.போலீசார் சோதனை நடத்தியதில் புரளி என்பது உறுதியானது. நேற்று 50க்கும் அதிகமான பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sundarsvpr
ஆக 21, 2025 09:50

விஞ்ஞானம் /அறிவியல் ஆகாயம் மட்டும் வளர்ந்துகொண்டபோகும். பிறகு எல்லை காணாமல் திக்கற்று திரும்பும். வெடிகுண்டு மிரட்டலும் அப்படிதான். அரசு தேவை இல்லாத பணிகளில் பணத்தை விரயம் செய்வதை தவிர்த்து வெடிமருந்துகள் செயல்படாமல் இருக்க ஒரு தொழில் நுட்பத்தை காண செலவு செய்யலாம். ராணுவ வீரர்களைப்போல் மாணவர்களை எதையும் எதிர்கொள்ளும் திறன்படைத்தவர்களாக வாழ பழக்கப்படுத்தவேண்டும்.


முருகன்
ஆக 21, 2025 09:38

இது போல் செய்யும் மர்ம நபர்களை ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் சிறையில் தாள்ள சட்டம் இயற்ற வேண்டும்


பெரிய குத்தூசி
ஆக 21, 2025 09:13

இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், இந்த கவனத்தை திசை திருப்பும் மிரட்டலுக்கு பின்னால் நடைபெறும் சதி செயல்கள், மற்றும் தேசவிரோத செயல்களை கண்டுபிடிக்கவேண்டும். கண்டிப்பாக பள்ளியில் குண்டு இருக்காது. அதேசமயம் காவல்துறை மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தை திசை திருப்பி விஷமிகள் அல்லது தீவிரவாதிகள், ராகுல் போன்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் தேசவிரோத செயல்களை பாதுகாப்பு ஏஜென்சி கள் கண்டுபிடிக்கவேண்டும்.