உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரைத் தொடர்ந்து டில்லி வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகள் தொடக்கம்

பீஹாரைத் தொடர்ந்து டில்லி வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகள் தொடக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹாரைத் தொடர்ந்து தலைநகர் டில்லியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.பீஹார் சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. அதன்படி, இறந்தவர்கள், வேறு ஊருக்கு குடிபெயர்ந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பெயர் இடம் பெற்றவர்கள் என 65 லட்சம் பேருடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.இவ்வாறு சட்டபூர்வமாக நீக்கப்பட வேண்டியவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர்.இது தொடர்பாக தேர்தல் கமிஷனும் விளக்கத்தை கொடுத்துள்ளது. மேலும், நாடு முழுவதும் மாநில வாரியாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தது. அதன்படி, முதற்கட்டமாக தலைநகர் டில்லியில் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்யும் பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ளது.இது தொடர்பாக டில்லி தலைமை தேர்தல் கமிஷனர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது; வாக்காளர் பட்டியல்களின் நேர்மையைப் பாதுகாப்பதற்காகவும், அதன் அரசியலமைப்பு ஆணையை நிறைவேற்றுவதற்காகவும், நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தலைநகர் டில்லியில் மேற்கொள்ளப்பட உள்ளது.இதற்கான, ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பெயர் விடுபட்டவர்கள், உரிய ஆவணங்களை விண்ணப்பங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும், இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !