உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெ.,க்கு ஜோதிடம் பார்த்தவர் மரணம்

ஜெ.,க்கு ஜோதிடம் பார்த்தவர் மரணம்

திருவனந்தபுரம்: முன்னாள் பிரதமர் இந்திரா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு ஜோதிட ஆலோசனைகள் வழங்கிய கேரளாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் பூஞ்சார் மித்ரன் நம்பூதிரிபாட், 95, உடல்நலக் குறைவால் காலமானார். கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், திரிபுனித்துராவை பூர்வீகமாக கொண்டவர் ஜோதிடர் பூஞ்சார் மித்ரன். வேதங்கள், இசை, நடனம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரிந்தவராக இருந்தார். இவரது ஜோதிட கணிப்புகள் துல்லியமாக இருந்ததால், அரசியல் தலைவர்கள் பலரும் இவரிடம் ஜோதிட ஆலோசனை பெற்று உள்ளனர்.அந்த வகையில், முன்னாள் பிரதமர் இந்திரா மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு சில ஆண்டுகள் ஜோதிட ஆலோசனைகள் வழங்கியுள்ளார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் திரிபுனித்துரா அருகே உள்ள எரூர் கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N.Purushothaman
நவ 19, 2024 15:58

ஆழ்ந்த இரங்கல்கள் ...ஆத்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை