உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது.1989ம் ஆண்டு ஐஎப்எஸ் கேடர் பிரிவைச் சேர்ந்த அதிகாரி விக்ரம் மிஸ்ரி. தற்போது வெளியுறவு செயலாளராக உள்ளார். 2024ம் ஆண்டு முதல் அவர் இப்பதவியை வகித்து வருகிறார்.அவரின் பதவிக்காலம் ஜூலை 14ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந் நிலையில் விக்ரம் மிஸ்ரிக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அமைச்சரவை நியமனக் குழு அடிப்படை விதி 56(d)ன் படி அவரின் பணி நீட்டிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. 2027ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வகையில் விக்ரம் மிஸ்ரி பதவியில் இருப்பார். வெளியுறவுச் செயலாளராக பதவி வகிக்கும் முன்பு விக்ரம் மிஸ்ரி, தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக இருந்தார். ஐகே குஜ்ரால், மன்மோகன் சிங் மற்றும் பிரதமர் மோடி ஆகிய 3 பிரதமர்களுக்கும் தனி செயலாளராக பணியாற்றிய தனித்துவ பெருமை பெற்றவர். பல நாடுகளில் உள்ள தூதரகங்களில் பல முக்கிய பதவிகளிலும் பணியாற்றியவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜூலை 02, 2026 04:52

இந்தியாவை நினைத்தால் பரிதாபம்தான் மிஞ்சுகிறது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் அந்தப் பதவிக்கு தகுதியானவர் ஒருவர் கூட இல்லாமல், பாவம் அவருக்கே பணி நீட்டிப்புச் செய்து, அறுத்துத் தள்ளச் சொல்ல வேண்டியுள்ளது. அவருடைய வாரிசுகள் அடுத்த வருடம் பதவிக்கு வர தயாராக இருக்கிறார்களா?


புதிய வீடியோ