உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு உளவு வேலை; காங்கிரஸ் மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு வேலை; காங்கிரஸ் மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளரை போலீசார் கைது செய்தனர். இந்திய ராணுவ ரகசியங்கள் குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிப்பவர்களை கண்டறிந்து போலீசார் கைது செய்து வருகின்றனர். யுடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்பட பலர் கைதாகி உள்ள நிலையில், தற்போது ராஜஸ்தானின் காங்கிரஸ் மாஜி அமைச்சர் ஷாலே முகமதுவின் முன்னாள் உதவியாளர் ஷாகுர் கானை போலீசார் கைது செய்துள்ளனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஷாகுர் கான், இந்திய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்துள்ளார். உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் ஷாகுர் கான் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது செல்போனை ஆய்வு செய்ததில், சில பாகிஸ்தானியர்களுடன் தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், இஸ்லாமாபாத்துக்கு 6 அல்லது 7 முறை சென்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய விசாரணை அமைப்புகள், தொடர்ந்து ஷாகுர் கானிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல, பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக ஹிமாச்சல பிரதேசத்தில் காங்ரா பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபர் அபிஷேக் பரத்வாஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Keshavan.J
மே 29, 2025 21:28

காங்கிரஸ் ஓப்பனாக பாகிஸ்தானுக்கு உளவு பார்க்குது இவர் திருட்டுத்தனமாக பார்த்திருக்கர்.. ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை


Amsi Ramesh
மே 29, 2025 17:51

பிறவி குணம் பேய்க்கு கொடுத்தாலும் குறையாது


spr
மே 29, 2025 17:35

மனம் நொந்து போன ஒரு இந்தியனின் கோரிக்கை " உலக அளவில் நடைபெற்ற பல பயங்கரவாதச் செயலுக்கு அவர்களே பொறுப்பு என ஊடகங்களும் செய்தித்தாள்களும் அறிவித்த பின்னரும், இந்தியாவில் நடந்த பல பாதகச் செயல்களுக்கும் அவர்கள் காரணம் என அறிந்த பின்னும், ஒரு இந்தியனாகக் கூட வேண்டாம் மனிதாபிமானம் உள்ள மனிதராக அந்த பயங்கரவாதிகளைக் கண்டிக்க வேண்டாமா? அவர்களுக்கு இது போல ஆதரவு தரும் இஸ்லாமியர்களை இது நாள் வரை வெறுக்காத உண்மையான இந்தியர்கள் பலரும் கூட இப்பொழுது வெறுக்கத் தொடங்கி விட்டனர். தயவு செய்து உங்களுக்கு விருப்பமான நீங்கள் நன்றியறிதலுடன் செயலாற்றும் பாகிஸ்தானுக்குச் சென்று விடுங்கள் உடனிருந்து உங்களை நம்பும் எங்களைக் கொலை செய்ய உதவாதீர்கள்"


என்றும் இந்தியன்
மே 29, 2025 16:17

இதில் என்ன தவறு இருக்கின்றது ஒரு முஸ்லிம் பாகிஸ்தானுக்கு ஆதராவாக செயல்படுவது எப்படி தவறாகும், நீங்கள் அவனை மனிதன் என்று நினைத்தால் அது உங்கள் தவறு அவன் வெறும் முஸ்லிம் மட்டுமே மனிதனேயில்லை


vadivelu
மே 29, 2025 15:32

இயற்க்கை ...