உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமலானால் ஜிடிபி அதிகரிக்கும்: ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமலானால் ஜிடிபி அதிகரிக்கும்: ராம்நாத் கோவிந்த்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் இந்தியாவின் ஜிடிபி 1 முதல் 1.5 சதவீதம் உயரும் என முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.லோக்சபாவுக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ' ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு மும்முரமாக உள்ளது. இது தொடர்பான திட்டத்தை தயாரிக்க முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆலோசனைக்கு பிறகு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. தொடர்ந்து கடந்த செப்., மாதம் இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.இந்நிலையில், ராம்நாத் கோவிந்த் கூறியதாவது: ' ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பாக மத்திய அரசு ஒரு மித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். இத்திட்டம் எக்கட்சிக்கும் சாதகமானது அல்ல. நாட்டிற்கானது. இது நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால், நாட்டின் ஜிடிபி 1 முதல் 1.5 சதவீதம் அதிகரிக்கும். இதனை நான் மட்டும் கூறவில்லை. பொருளாதார நிபுணர்களும் கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
டிச 11, 2024 23:29

பேசாம ஒரே நேசன்... ஒரே கட்சின்னு சொல்லிட்டா போதுமே.. எலக்சனே வாணாம். GDP செமையா வளரும். இன்னொரு குழு அமைச்சு நல்ல முடிவு சொல்லுங்க.


Anvar
டிச 12, 2024 07:03

அப்பாவி அப்பாவிதான் முட்டாள்கள் முட்டாள்கள் தான்


Barakat Ali
டிச 11, 2024 22:31

முன்னாள் ஜனாதிபதி கூறுவது சரியே ..... செலவுகள் குறைவதாலும் நிலையான அரசுகள் அமைவதாலும் ஜிடிபி நிச்சயம் உயரும் .... புள்ளிவிபரம் இருப்பதால்தான் சொல்கிறார் .....


venugopal s
டிச 11, 2024 22:26

அடுத்த படியாக தேர்தலே நடத்தவில்லை என்றால் ஜி டி பி ஐந்தாறு சதவீதம் உயரும், அதனால் தேர்தலே நடத்த வேண்டாம் என்பார்கள்!


venugopal s
டிச 11, 2024 21:31

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பது தவறான கருத்து!


Sakthi,sivagangai
டிச 11, 2024 21:41

அங்க அடிச்சா இங்க வலிக்கும் என்பது சரியான கருத்து..


bavan
டிச 11, 2024 21:06

வாக்குச்சீட்டை பயன்படுத்த வைத்தால் வரவேற்கலாம்


Barakat Ali
டிச 11, 2024 22:34

வாக்குச்சீட்டு முறையால் நாங்களும் ஜெயிக்கவில்லை .... ஆகவே நாங்கள் அனைவரும் ராஜினாமா செய்கிறோம் என்று கூறி எதிர்க்கட்சி எம் பி க்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை அவைத்தலைவரிடம் கொடுத்தால் வரவேற்கலாம் .... எப்படி வசதி ன்னு கேட்டுச் சொல்லுங்க பவன் ......


sankaranarayanan
டிச 11, 2024 21:05

இப்போது நாட்டின் முன்னேற்றத்தைப்பார்க்க வேண்டுமே ஒழிய கட்சியின் முன்னேற்றத்தை பார்த்துக்கொண்டிருந்தால் அதனால் மக்களுக்கு விளைவுகள் பாதிப்பு அதிகமாகும்.


Ramesh Sargam
டிச 11, 2024 20:15

இத்திட்டம் எக்கட்சிக்கும் சாதகமானது அல்ல. நாட்டிற்கானது. அப்படி என்றால் எதிர்க்கட்சியினர் ஏன் இந்த திட்டத்துக்கு பயப்படுகின்றனர்? ஏன் எதிர்க்கின்றனர்? ஒருவேளை அவர்களுக்கு சாதகமாக இல்லையோ?