உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்தடுத்து நான்கு திருமணம்; காட்டிக் கொடுத்தது பேஸ்புக்: கேரள கல்யாணராமனுக்கு கம்பி

அடுத்தடுத்து நான்கு திருமணம்; காட்டிக் கொடுத்தது பேஸ்புக்: கேரள கல்யாணராமனுக்கு கம்பி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: அடுத்தடுத்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த, 'கேரள கல்யாணராமன்' ஒருவர், தன் இரு மனைவியர் முகநுால் தோழியராக இருந்ததால் குட்டு வெளிப்பட்டு, தற்போது 'கம்பி' எண்ணுகிறார்.கேரள மாநிலம், காசர்கோடு அருகே வெள்ளரிக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் தீபு பிலிப், 36. பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வதை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டவர். தன் மனதுக்கு பிடித்த பெண்ணை பார்த்தால், அவரிடம் எப்படியாவது பழகி, அவரிடம் தான் ஒரு அனாதை என்றும், இதனால் தனக்கு பெண் கிடைக்காததால் நீண்ட காலமாக தனியாக வாழ்ந்து வருவதாகவும் கூறுவார்.சில பெண்கள் மனமிறங்கி உடனடியாக அவரது வலையில் விழுந்து விடுவர். இப்படி தான், 10 ஆண்டுகளுக்கு முன், காசர்கோட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை முதல் திருமணம் செய்தார். மூன்று ஆண்டுகள் அவருடன் வாழ்ந்தார். இரண்டு குழந்தைகள் பிறந்தன. பின்னர், அப்பெண்ணிடமிருந்து நகை, பணத்தை பறித்துக் கொண்டு தலைமறைவானார்.தொடர்ந்து, காசர்கோட்டிலேயே இரண்டாவது திருமணம் செய்தார். அந்த பெண்ணுடன் தமிழகத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்தார். ஒரு கட்டத்தில் அவரையும் விட்டு, எர்ணாகுளத்தைச் சேர்ந்த பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.இவருடன் இருந்த போதுதான், ஆலப்புழாவைச் சேர்ந்த விவாகரத்தான ஒரு பெண்ணுடன் முகநுாலில் பழக்கம் ஏற்பட்டது. அவரையும் தன் வலையில் வீழ்த்திய தீபு பிலிப், நான்காவதாக அவரை திருமணம் செய்தார். இந்த நான்காவது மனைவி வாயிலாக தான் தனக்கு சிக்கல் எழப்போகிறது என்பதை, தீபு பிலிப் அப்போது உணரவில்லை.தீபு பிலிப்பின் இரண்டாவது மற்றும் நான்காவது மனைவியர் முகநுாலில் தோழிகளாகி உள்ளனர். இருவரும் தங்கள் கணவரை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்ட போதுதான், இருவருக்கும் ஒரே நபர்தான் கணவர் என்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து, நான்காவது மனைவி போலீசில் புகார் செய்ய, தீபு பிலிப் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Nallavan
பிப் 12, 2025 12:54

ஒரு சந்தேகபேர்வழி, இவரை நம்ப கூடாது


KavikumarRam
பிப் 12, 2025 11:42

பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு.


Saai Sundharamurthy AVK
பிப் 12, 2025 11:15

இந்த திருட்டு பயலுக்கு கல்யாணராமன் என்கிற பெயரை உபயோகிப்பது தவறு. ராமபிரானை இழிவு படுத்துவதாக உள்ளது.


Barakat Ali
பிப் 12, 2025 12:57

என்ன சொல்றே????


Jayaraman
பிப் 12, 2025 08:25

ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு, மத்திய அரசிடமிருந்து ஆன்லைன் மூலமாக, தனித்தனியே அனுமதி பெறுவது, அவசியமாகிறது. அனுமதி பெறுவதற்கு ஆதார் அட்டை எண்னை வழங்க வேண்டும். இதன் மூலமாக ஏற்கனவே திருமணம் ஆனவர்களா, வயது சரியாக உள்ளதா, divorce செய்து திருமணம் செய்கிறார்களா போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். இதற்கு app ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.டைவர்ஸ் செய்தவர்களை, அரசே பதிய வைக்க வேண்டும். மத்திய அரசின் அனுமதி சான்றிதழ் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது. பதிவு திருமணம் செய்வதாக இருந்தாலும் இந்த சான்றிதழ்கள்அவசியமே. வங்கி, குடும்ப அட்டை, தொலைபேசி போன்றவற்றோடு ஆதார் எண்னை இணைப்பது போல, நடக்கப் போகிற திருமணங்களோடும் இணைக்க வேண்டும். திருமண அனுமதி சான்றிதழ், app மூலமாகவே உடனடியாக கிடைக்க வேண்டும்.


Pandi Muni
பிப் 12, 2025 09:41

நல்ல யோசனைதான் அனால் ஈ.வே.ராவுக்கு பிறந்த பதர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துமே?


SUBRAMANIAN P
பிப் 12, 2025 13:50

இது அரேபியர்களுக்கும் பொருந்தாது..


Kalyanaraman
பிப் 12, 2025 07:38

ராமன் ஏக பத்தினி விரதன் என்பது நமது இதிகாசம் உணர்த்தும் மிக உன்னதமான விஷயம். பெண்களை ஏமாற்றுபவனுக்கு கல்யாணராமன் என்று பட்டப்பெயர் வைத்து போடுவது அநியாயமாக தெரியவில்லையா?


Barakat Ali
பிப் 12, 2025 12:59

ஊடகங்கள் செஞ்சா தப்பில்லை .... குறை சொல்லாதீங்கோ ....


கல்யாணராமன்
பிப் 12, 2025 06:28

அது சரி பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டவனை அவன் பெயரை சொன்னால் போதுமே அதற்கு கல்யாணராமன் என்று கிண்டல் செய்யும் பாணியில் குறிப்பிடுவதேன்.


SUBRAMANIAN P
பிப் 12, 2025 13:52

அதானே பார்த்தேன்


Kasimani Baskaran
பிப் 12, 2025 05:58

மல்லர்கள் கேரளாவில் இருந்து கொண்டுவந்து தமிழகத்தில் கொட்டும் மருத்துவக்கழிவுகளை விட மோசமான ஆளாக இருப்பான் போல இந்து பிலிப்.


N Sasikumar Yadhav
பிப் 12, 2025 07:54

இந்து பிலிப் இல்லை. ஈவெ ராம்சாம் வழி தோன்றலான திருட்டு திராவிட பிலிப் என தெளிவாக சொல்லுங்க


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 12, 2025 05:41

இன்னும் சிறிது காலம் போனால் பேஸ் புக் கிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளலாம். கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு இடங்களில் தனியாக வாழலாம். ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் தனது மனைவி அல்லது கணவன் போலவே ஒரே ரோபோ தாயாரித்து அந்த ரோபோவிற்கு மனைவி அல்லது கணவன் பற்றிய தரவுகள் கொடுத்து விட்டால் தனித்தனியாக குடும்பம் நடத்தி கொள்ளலாம்.


புதிய வீடியோ