மேலும் செய்திகள்
பஸ் கவிழ்ந்து கல்லுாரி மாணவர் இருவர் பலி
07-Feb-2025
லக்னோ; ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் டிரக், பஸ் மோதிக் கொண்ட கோர விபத்தில் 4 பேர் பலியாகினர்.இதுபற்றிய விவரம் வருமாறு; லக்னோவில் இருந்து ஆக்ரோ நோக்கி பஸ் ஒன்று ஏராளமான பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. ஆக்ரோ - லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த பஸ் பதேஹாபாத் என்ற பகுதியில் வந்தது. அப்போது முன்னே சென்று கொண்டிருந்த டிரக் லாரியை முந்த முயன்றது. கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிர்பாராத விதமாக டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இடதுபுறம் ஒட்டுமொத்தமாக கடும் சேதம் அடைந்தது. விபத்தில் பஸ்சில் பயணித்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 19 பேர் காயம் அடைந்தனர்.தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிய அவர்கள், காயம் அடைந்தவர்கனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
07-Feb-2025