உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நண்பா... நான் இருக்கேன்! பாகிஸ்தான் ஆதரவு: சீனா அறிவிப்பு

நண்பா... நான் இருக்கேன்! பாகிஸ்தான் ஆதரவு: சீனா அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஷ்மீர் பஹல்காமில் ஏப்., 22ல் பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பல்வேறு உலக நாடுகள், தாக்குதலை கண்டித்து இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்தன. ஆனால், நமது அண்டை நாடு சீனா நீண்ட இறுக்கத்தில் இருந்தது. பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவுக்கு இந்தியாவுடன் எப்போதும் பகைமை உணர்வு தான் உள்ளது.நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். ரஷ்யா, சீனா உதவிக்கு வர வேண்டும் என அழைத்தார். இதனால், மனம் குளிர்ந்த சீனா, இப்போது மவுனத்தை கலைத்துள்ளது.

சீனாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் குவோஜியா குன் பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி:

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டம் தணிய வேண்டும். காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் குறித்து நேர்மையான நடுநிலை விசாரணையை விரைவில் நடத்த வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கிறது என இந்தியா தரப்பில் பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் நேர்மையான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட விசாரணை நடத்துவது அவசியம்.ஆனால், எல்லா காலங்களிலும், எங்கள் நட்பு நாடாக பாகிஸ்தான் உள்ளது. அந்நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க நாங்கள் துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Muralidharan S
ஏப் 29, 2025 12:18

விலை ஜாஸ்தியா இருந்தாலும் இந்திய தயாரிப்பு பொருட்களையே வாங்குங்கள்.. வாங்க சக்தி இல்லை என்றால் பொறுத்து இருங்கள்.. எக்காரணம் கொண்டும் சீன பொருட்களை வாங்காதீர்கள். குறிப்பாக அவனுடைய தயாரிப்பு மொபைல் போன் வாங்காதீர்கள்.. உங்கள் தகவல்கள், தொடர்புகள், புகைப்படங்கள் வங்கி விபரங்கள் எல்லாவற்றையும் திருடுகிறார்கள் சீன திருடர்கள் உங்கள் மொபைல் போனில் இருந்து.. பாகிஸ்தான் ஒரு கள்ளன் என்றால் சீன ஒரு குள்ளக்கள்ளன்.


கண்ணன்
ஏப் 29, 2025 11:58

ஏற்கனவே டீகோகார்சியாவிலிருந்து போர்கப்பல்கள் செங்கடல் பகுதியிலுள்ளன அவைகள் ஏமனையும் பாக் குவாதர், கரச்சித் துறைமுகங்களைக் கண்காணிக்கின்றன. வங்க விரிகுடாவிற்கு இன்னொரு கப்பல் படையினை வம்பிற்கு சீனா அழைக்குனதோ?


Muralidharan S
ஏப் 29, 2025 11:51

சீன நம்மை எதிரி நாடு என்று கருதுகிறது. பாகிஸ்தான் நமக்கு என்றுமே எதிரி நாடு. சீன என்றுமே இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றபோதிலும், எதிரிக்கு எதிரி நண்பன் என்று பாகிஸ்தானை பிடித்துக்கொண்டு சுற்றிவருகிறது.. சீன நம்மை சுற்றி வளைக்க பாகிஸ்தான், நேபாளம், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் முதலீடு செய்து, துறைமுகங்களை நிறுவி.. பல கட்டுமானப்பணிகளுக்கு உதவி அங்கு நிரந்தரமாக இருக்க விரும்புகிறது - போர் என்று வந்தால் இந்தியாவுக்கு அருகில் இருந்து தாக்க.. அதுதான் நட்புக்கு காரணம்.. வியாபார / ஏற்றிமதி / இறக்குமதிக்கு எதிராக பாகிஸ்தானுக்கு நாம் என்ன நிலைப்பாட்டை எடுத்து உள்ளோமோ.. அதே நிலைப்பாடு .. சீனாவுக்கும் சேர்த்து எடுக்கவேண்டும்.. பாகிஸ்தானும், சீனாவும், நட்பு என்று கூறிக்கொண்டே சிரித்துக்கொண்டே நம்மை வீழ்த்த பிறந்த நாடுகள். நமது மக்கள் சீனப்போர்ட்டுகளை பஹிஷ்காரம் செய்யவேண்டும். கொரோனா வைரஸ் உற்பத்தி செய்து உலக நாடுகளை அச்சுறுத்திய நாடு சீன என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. ஒருவேளை நாம் பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால், நமது முழுக்கவனம் பாகிஸ்தான் போரில் இருக்கும்போது, சீன நம்மீது இந்தப்பக்கத்தில் இருந்து தாக்கத் தொடங்கினாலும் தொடங்கும்.. நாம் இந்த இரு வஞ்சக நரிகளிடமும் எச்சரியாக இருக்க வேண்டும்.


Apposthalan samlin
ஏப் 29, 2025 11:50

ரோசம் மானம் இருந்தால் ஒரு சீன பொருளையும் வாங்காமல் நாம் தயாரிக்க வேண்டும் முடியுமா முடியாதே கம்முனு இருந்தால் ஜம்முனு இருக்கலாம் சீனா கூட நாம் பொத்தி போட முடியாது


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 29, 2025 12:37

அடிமைத்தனம் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது வெளிப்படையாக தெரிகிறது


ராமகிருஷ்ணன்
ஏப் 29, 2025 11:08

பாகிஸ்தான் என்ற நாட்டை முழுங்கி விடுவான் சப்பை மூக்கன்.


sathu
ஏப் 29, 2025 10:53

சீனா: நண்பா, நான் இருக்கேன் கவலப்படாதே. பாக்: நீ இருப்படா பரதேசி, நீ இருப்ப... நான் இருக்க வேண்டாமா.


ஆரூர் ரங்
ஏப் 29, 2025 10:03

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனாவிலிருந்து கராச்சி துறைமுகத்துக்கு காரகோரம் நெடுஞ்சாலை அமைத்துள்ளது. இதனை பாதுகாத்து கொள்ள சீனா என்ன வேண்டுமானாலும் செய்யும்.


Bharath Balasubramanian
ஏப் 29, 2025 09:44

சீனாவோடு ரஹஸ்ய ஒப்பந்தம் போட்ட காங்கிரஸ் என்ன சொல்லும்.


aaruthirumalai
ஏப் 29, 2025 09:38

இப்ப கூட இந்தியர்கள் கைகளில் சீன பொருட்கள் பயன்பாட்டில் இருந்து கொண்டே இருக்கிறது.


Savitha
ஏப் 29, 2025 09:17

பாகிஸ்தானின் இறையாண்மையை காப்போம்? நல்ல ஜோக், இறையாண்மை பாகிஸ்தானுக்கு இருக்கா? என்ன?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை