உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு முதல் கும்பமேளா வரை: இந்தியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசல்

பெங்களூரு முதல் கும்பமேளா வரை: இந்தியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசல்

பெங்களூரு: பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த ஆண்டில் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.18 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு, பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கோப்பையை கைப்பற்றிய பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது. வீரர்களை பார்க்க வந்த மக்கள் மத்தியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்க 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஓராண்டில் சில இடங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விவரம் பின்வருமாறுடில்லியில் 18 பேர்கடந்த பிப்., மாதம் 15ம் தேதி டில்லி ரயில் நிலையத்தில் உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் நகர் செல்ல காத்திருந்த பயணிகள் மத்தியில் கூட்ட நெரிசலில் 11 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். ரயில் தாமதம் காரணமாகவும், அதிக டிக்கெட் விற்பனை காரணமாகவும் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது.கும்பமேளாவில் 30 பேர் பிரயாக் ராஜ் நகரில் மஹா கும்பமேளாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர். ஜன.,29 ல் அமாவாசை நாள் அன்று புனித நீராடுவதற்காக ஏராளமானோர் கூடிய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.கோவா கோவிலில்கோவாவின் ஷிர்கோவான் பகுதியில் உள்ள லயிராய் கோவிலில் பூஜையின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். அதிககூட்டம் சேர்ந்ததும், போதிய முன்னேற்பாடு செய்யாததுமே இந்த கூட்ட நெரிசலுக்கு காரணம் எனக்கூறப்பட்டது.திருப்பதி கோவில்ஆந்திர மாநிலம் திருப்பதியில் டோக்கன் விநியோகத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். டோக்கன் வாங்க கவுண்டர் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பெண் பக்தர் ஒருவருக்கு உதவி செய்ய கேட் ஒன்றை திறந்த போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.தெலுங்கானா தியேட்டரில்கடந்த ஆண்டு டிச.,4 ம் தேதி தெலுங்கானா தலைநகர் ஐ தராபாத்தில் உள்ள சினிமா தியேட்டரில் புஷ்பா 2 படத்தை பார்க்க ஏராளமானோர் கூடினர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஏற்பட்ட நெரிசலில் 35 வயது பெண் மற்றும் அவரின் 9 வயது மகன் உயிரிழந்தனர்.சென்னைசென்னை மெரினா கடற்கரையில், கடந்த 2024ம் ஆண்டு அக்., 6ம் தேதி நடந்த விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இதை பார்க்க வந்த, கொருக்குபேட்டையை சேர்ந்த ஜான், 56; பெருங்களத்துாரை சேர்ந்த ஸ்ரீனிவாசன், 54; ஆந்திராவை சேர்ந்த தினேஷ்குமார், 37; திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன், 34, விழுப்புரத்தை சேர்ந்த மணி, 37 ஆகியோர் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்து உயிரிழந்தனர்.ஹத்ராசில்கடந்த ஆண்டு ஜூலை மாதம், உ.பி.,யின் ஹத்ராஸ் நகரில், மத நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Seekayyes
ஜூன் 05, 2025 13:10

இந்த நாட்டுக்கு விமோசனம்.


Kulandai kannan
ஜூன் 05, 2025 09:03

சென்னை ஏர் ஷோ விபத்து ஏன் லிஸ்டில் இல்லை?


SRIDHAAR.R
ஜூன் 05, 2025 08:19

நல்ல வேலை இந்த சமயத்தில் UPயை காங்கிரஸ் ஆளவில்லை


Ramona
ஜூன் 05, 2025 06:26

ரோட் விபத்துகளில் கொத்து கொத்தாக உயிர் போகிறது, கூட்ட நெரிசலில் பல உயிர் போகிறது, கள்ள சாராயம் குடிச்சு பல உயிர்கள் போகின்றன, இதையும் போடுங்களேன், கும்பமேளா அங்க வந்த கூட்டம் எங்கே ,ஸ்டேடியத்தில் கூடிய கூட்டம் எங்கே , கூட்டத்தைகட்டுபடுத்த முடியாத இவைதான் 11 உயிர்ப்பிக்க காரணம்.


shAlini
ஜூன் 05, 2025 05:57

all are very sad incidents


Anand C
ஜூன் 05, 2025 00:32

தொடரும் சோகங்கள். வருந்துகிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை