உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஸ் சிலிண்டர் விபத்து பலி எண்ணிக்கை 7 ஆனது

காஸ் சிலிண்டர் விபத்து பலி எண்ணிக்கை 7 ஆனது

ஹூப்பள்ளி: தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியில் உனகல் அச்சவன் காலனில் இம்மாதம் 23ல் அய்யப்ப பஜனை நடந்தது. அங்கேயே சமையல் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அன்றிரவு சில அய்யப்ப பக்தர்கள் அங்கேயே தங்கினர். அப்போது பக்தர் ஒருவரின் கால் பட்டு, காஸ் சிலிண்டர் உருண்டதில், காஸ் கசிவு ஏற்பட்டது. மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டிருந்ததால், பயங்கர சத்தத்துடன் வெடித்தது.இதில், ஒன்பது அய்யப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களில் நேற்று முன்தினம் வரை ஒருவர் பின் ஒருவராக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தேஜஸ்வர், 26, நேற்று உயிரிழந்தார். இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.மேலும் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் உயிரை காப்பாற்ற, டாக்டர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மற்றொருவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை