உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குருவாயூர் கோவிலுக்கு 25 சவரன் தங்க கிரீடம் காணிக்கை

குருவாயூர் கோவிலுக்கு 25 சவரன் தங்க கிரீடம் காணிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலக்காடு: கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 25 சவரன் எடை கொண்ட தங்க கிரீடத்தை, துபாயில் பணியாற்றும் கேரள மாநிலம், சங்கனாசேரி கோட்டமுறி பகுதியைச் சேர்ந்த ரதீஷ் மோகன் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார்.கோவில் நிர்வாக குழு உறுப்பினர் மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் கிரீடத்தை பெற்று கொண்டார். கோவில் துணை நிர்வாகி பிரமோத், உதவி மேலாளர் பிரசாந்த், கிரீடம் சமர்ப்பித்த ரதீஷ் மோகனின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.இவர், குருவாயூர் மூலவர் கிருஷ்ணருக்கு, தங்க புல்லாங்குழலை கடந்தாண்டு அக்டோபரில் காணிக்கையாக சமர்ப்பித்தார். குருவாயூர் கோவிலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா உட்பட பலர், தங்க கிரீடம் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
அக் 18, 2024 05:26

அண்ட சராசரங்களுக்கே அதிபதியான அவனை ஒரு சிறிய கிரீடத்தை கொடுத்து ஏமாற்றி விட முடியாது. கர்மவினைகளை அவன் நீக்குவது அரிதிலும் அரிது.


MP.K
அக் 18, 2024 04:59

கோயில்களுக்கு எதையாவது காணிக்கை கொடுத்து புண்ணியம் தேடிக்கொள்கின்றனர் இது அவர்களை மனதை திருப்தி செய்யும் செயல்களில். குறிப்பாக, பணம் படைத்த செல்வந்தர்கள் பொன்னையும் வாரி வழங்கி இன்பம் அடைகின்றனர் பக்தி உலகில். அதே நேரத்தில் கல்வி, மருத்துவம் இதில் தங்கள் பங்களிப்பை செய்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.


J.V. Iyer
அக் 18, 2024 04:46

இன்னும் எவ்வளவு நாட்களில் இவைகள் தங்க முலாம் பூசியதாக மாற்றப்படுமோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை