உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தந்தையுடன் செல்ல ரூ.1 கோடி கேட்ட சிறுமி; தாயை கண்டித்த உச்ச நீதிமன்றம்

தந்தையுடன் செல்ல ரூ.1 கோடி கேட்ட சிறுமி; தாயை கண்டித்த உச்ச நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குழந்தை பராமரிப்பு விவகாரத்தில் தந்தையுடன் செல்ல அவரின் 12 வயது மகள், 1 கோடி ரூபாய் கேட்ட நிலையில், குழந்தையின் மனதை தேவையின்றி கெடுப்பதாக தாயை உச்ச நீதிமன்றம் கண்டித்து உள்ளது.கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, இது தொடர்பாக மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் முறையிட்டனர். மனு தாக்கல் இதன் இறுதியில், 12 வயது மகள் தந்தையுடன் செல்ல மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அந்த சிறுமியின் தாய் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நீண்ட நாட்களாக விசாரணையில் உள்ளது. இதையடுத்து, தந்தை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து, மக ளை தன் பொறுப்பில் விட வலியுறுத்தி தந்தை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் வினோத் சந்திரன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தந்தை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பி.ஆர்.பட்வாலியா, “குழந்தையை அழைக்க தந்தை சென்றபோது, அவருடன் வர சிறுமி மறுத்துவிட்டார். மாறாக, 'நீ என் அம்மாவை துன்புறுத்துகிறாய். ''நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டுள்ளாய். 1 கோடி ரூபாய் தந்தால், உன்னுடன் வருகிறேன். இல்லையென்றால் வரமாட்டேன்,” என, கூறியுள்ளார். “தாயின் தலையீடு காரணமாகவே குழந்தை அவ்வாறு சொல்கிறார். அதுமட்டுமின்றி குழந்தையின் பள்ளி பதிவேடுகளில், தந்தையின் பெயரை தாய் நீக்கியுள்ளார். இந்த வழக்கில் ஒரு மத்தியஸ்தரை நியமிக்க வேண்டும்,” என, கோரினார். மத்தியஸ்தம் தாயின் வழக்கறிஞர் அனுபா அகர்வாலும், மத்தியஸ்தரை நியமிக்க கோரிக்கை விடுத்தார். இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் தன் குழந்தையின் மனதை தாய் கெடுத்துள்ளது தெரிகிறது. வழக்கு தொடர்பான விசாரணையில், ஒரு கட்டத்தில் அந்த சிறுமி தன் தந்தையை குச்சியால் தாக்கியதும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் தன் குழந்தையின் மனதை தாய் கெடுத்துள்ளது தெரிகிறது. வழக்கு தொடர்பான விசாரணையில், ஒரு கட்டத்தில் அந்த சிறுமி தன் தந்தையை குச்சியால் தாக்கியதும் தெரிய வந்துள்ளது.தேவையில்லாமல் குழந்தையின் மனதை தாய் கெடுக்க வேண்டாம். இன்று, தந்தைக்கு அச்சிறுமி செய்வது நாளை தாய்க்கு திரும்ப வாய்ப்புள்ளது. இரு தரப்பினரையும் மத்தியஸ்தத்துக்கு பரிந்துரைப்பது பொருத்தமானது என நீதிமன்றம் கருதுகிறது. அதன்படி, இந்த விவகாரத்தில், உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிது பஹ்ரியை மத்தியஸ்தராக நியமிக்கிறோம். இரு தரப்பினருக்கும் இடையிலான அனைத்து பிரச்னைகளையும் அவரே பரிசீலிப்பார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

visu
ஜூலை 25, 2025 16:39

எந்த குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே


Ramesh Sargam
ஜூலை 25, 2025 12:09

இன்று பல குடும்பங்களில் குழந்தைகளின் மனநிலையை கெடுப்பவர்கள் அவர்கள் அம்மாக்களே. ஒரு காலத்தில் அம்மா என்றால் அந்த அளவுக்கு மரியாதை இருந்தது. தாயிட்சிறந்த கோவிலுமில்லை என்று அன்று அம்மாக்களை கொண்டாடினோம். இன்று அம்மா என்றால் சும்மா என்றாகிவிட்டது.


Anantharaman Srinivasan
ஜூலை 25, 2025 12:02

தாயின் தூண்டுதலின் பேரில் தந்தையுடன் செல்ல ரூ.1 கோடி தரச்சொன்ன. 12 வயது சிறுமி நாளை தந்தையுடன் சென்று சுமூகமாக வாழ முடியுமா..?


KRISHNAN R
ஜூலை 25, 2025 10:28

குறிப்பா முதுநிலை வக்கீல் சொன்னால் கேட்பர்.. செலவு அதிகம்...


GMM
ஜூலை 25, 2025 10:00

கோடி கணக்கில் பணம் விவகாரம் என்றால் வழக்கறிஞர் சட்ட புத்தகம் அனைத்தையும் புரட்டி பார்க்கின்றனர். நீதிமன்றம் அதிக ஆர்வம் காட்டுகிறது. விசாரணை, மத்தியஸ்தர்... போன்ற பணிகளுக்கு ஏராள வரி பணம் செலவு செய்ய வேண்டும். அதனை வழக்காடுபவர்களிடம் வசூலிக்க முடியாது. இது போன்று 10 சதவீத வழக்கு வந்தால், அபிவிருத்தி கனவில். நாடு திவால் ஆகும். இதற்கு மன்னர் ஆட்சி மேல். ?


Barakat Ali
ஜூலை 25, 2025 09:23

வழக்கில் தொடர்புடையோரின் பெயர்கள் ஏன் வெளியிடப்படவில்லை ???? தமிழக மீடியா மட்டுமே இப்படி .....


புதிய வீடியோ