உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தே பாரத் ரயிலில் பயணித்த சிறுமி

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தே பாரத் ரயிலில் பயணித்த சிறுமி

கொச்சி : அறுவை சிகிச்சைக்காக உடலுறுப்புகள் விமானத்தில் கொண்டு வரப்பட்டன; ரயிலில் எடுத்து வரப்பட்டன என்ற செய்திகளை பார்த்திருப்போம். ஆனால், கேரளாவில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக, நோயாளியை 'வந்தே பாரத்' ரயிலில் அழைத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மல்லுசேரி பகுதியைச் சேர்ந்த பில்ஜித், 18, என்ற மாணவர், சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். எர்ணாகுளத்தின் கொச்சியில் உள்ள, 'லிட்டில் பிளவர்' என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இந்த தகவல், கொல்லம் மாவட்டத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டு, மாற்று இதயத்திற்காக காத்திருந்த 13 வயது சிறுமியின் குடும்பத்துக்கு தெரிவிக்கப்பட்டது. வழக்கமாக உடலுறுப்புகள் எடுத்து செல்லப்படும் நிலையில், அறுவை சிகிச்சைக்காக சிறுமியை கொச்சிக்கு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதன்படி, கொல்லத்தில் இருந்து வந்தே பாரத் ரயிலில் வந்த சிறுமி, கொச்சியில் உள்ள 'லிசி' என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லிட்டில் பிளவர் மருத்துவமனையில் இருந்து பில்ஜித்தின் இதயம், லிசி மருத்துவமனைக்கு 20 நிமிடங்களில் எடுத்து வரப்பட்டது. போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தியதால், இந்த துாரத்தை 20 நிமிடங்களில் கடக்க முடிந்தது. கொல்லத்தில் இருந்து கொச்சி 150 கி.மீ., தொலைவில் உள்ளது. சாலை மார்க்கமாக சென்றால் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகும். ஆம்புலன்சில் வந்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதையடு த்து, அந்த சிறுமியை வந்தே பாரத் ரயில் மூலம் இரண்டு மணி நேரத்திற்குள் அழைத்து வந்தனர். மருத்துவமனையில் மூன்று மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின், சிறுமி தேறி வருவதாக டாக்டர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

N Ganapathy Subramanian
செப் 15, 2025 07:16

In Kerala, qualified educated politicians are plenty. Irrespective of party, they have improved train services throughout the state. Public at large are benefited. They operate many passenger train between all cities for the benefit of students, office goers etc . They interact with Delhi and have improved public transport. In here in TN , there is no improvement. we've to deal in single line between Villupram and Mayavaram/ Kumbakonam. Train is an important, fast , cheap and dependable transport than bus. on this TN is 30 years behind KL.


Muthu -Kovai
செப் 14, 2025 19:24

God bless you my child.... om Namashivaya...


Vasan
செப் 14, 2025 16:49

Our prayers and best wishes for the speedy and full recovery of the girl. Our sincere thanks to the family of Donor and to the medical team, and to the railway team.


Rathna
செப் 14, 2025 11:28

வீல் சேருக்கும் லஞ்சம் கொடுக்கும் நிலை. ஆஸ்பத்திரியில் பிணத்தை எடுக்கவும் பணம் என்னும் லஞ்சம். நாடு மனிதாபம் இல்லாத நிலையில் செல்லுகிறது.


Subramanian
செப் 14, 2025 09:41

அந்த சிறுமி நல்ல உடல் நலத்துடன் இருக்க பிரார்தனை


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 14, 2025 09:12

கேரளாவில் வழக்கமாக எல்லா இரயில்களும் எல்லா ஸ்டேஷன்களிலும் நின்று செல்லும் அது எக்ஸ்பிரஸாக இருந்தாலும் சரி பேசின்ஜர் இரயிலாகவோ அல்லது நீண்ட தூர இரயிலாக இருந்தாலும் சரி நின்று தான் செல்லும். வந்தே பாரத் கூட குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைந்தது கிடையாது. கேரளாவில் இருந்து வெளிமாநிலம் செல்லும் இரயில்கள் கோவை வரை மிக தாமதமாகவே வரும். கோவையிலிருந்து கிளம்பிய பின்னர் கேரளாவில் இழந்த நேரத்தை ஈடு செய்ய வேகத்தை அதிகப்படுத்தி இறங்குவார்கள். கேரளா காரர்கள் இந்த இரயில் விஷயத்தில் இருக்கும் ஒற்றுமைக்கு கட்சி பேதம் கிடையாது இன மொழி மத பேதம் கிடையாது. அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.


Venkatesan Srinivasan
செப் 14, 2025 10:04

பெரும்பாலான அதிவிரைவு ரயில்கள் கோவையை தாண்டி கேரளத்தில் நுழைந்தால் பாசஞ்சர் ஆகிவிடும். கால அட்டவணை ஏற்பாடு அப்படி. கோயம்புத்தூர் மாநகர இரயில் நிலையத்தையே பாலக்காடு இரயில்வே டிவிஷன் கீழ் கொண்டு வந்து அதன் வழியாக சென்று கொண்டிருந்த பல இரயில்களை வேறு தடத்தில் மாற்றி முன் பதிவுகளை பாலக்காட்டிற்கு சாதகமாக மாற்றி விட்டனர். அவ்வளவு சாமர்த்தியம்.


நிக்கோல்தாம்சன்
செப் 14, 2025 07:57

படிப்பதற்க்கே கண்கள் கலங்குகின்றன அந்த சிறுமி நீண்ட நாள் வாழ இயற்க்கை உதவி புரியட்டும்


Rajamani
செப் 14, 2025 09:43

why there is no wheel chair provided to take the girl very sad to note that some one is carrying her


முக்கிய வீடியோ