உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சான்பிரான்சிஸ்கோ- மும்பை ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது; பயணிகள் பத்திரமாக மீட்பு

சான்பிரான்சிஸ்கோ- மும்பை ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது; பயணிகள் பத்திரமாக மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: சான்பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது ஏற்பட்டது. கோல்கட்டா விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.சான்பிரான்சிஸ்கோவில் இருந்து கோல்கட்டா வழியாக வந்து கொண்டிந்த ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777-200LR ரக விமானத்தின் எஞ்சினில் பழுது ஏற்பட்டது. விமானத்தின் 2 எஞ்சின்களில் ஒன்றில் பழுது ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். ஏர் இந்தியா விமானத்தில் பழுது ஏற்பட்ட நிலையில், திட்டமிட்ட நேரத்தில் கோல்கட்டா விமான நிலையத்தை அடைந்தது. திட்டமிட்ட நேரமான நள்ளிரவு 12.45க்கு கோல்கட்டா விமான தரையிறக்கப்பட்டது. எஞ்சின் பழுதால் அதிகாலை 5.20 மணி அளவில் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்குமாறு விமானி அறிவுறுத்தினார். விமானிகள் அனைவரும் கீழே இறக்கவிடப்பட்டதை அடுத்து நிபுணர்கள் விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.கடந்த ஜூன் 12ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கிளம்பிய 30 வினாடிகளிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். விஸ்வாஸ் குமார் என்ற நபர் மட்டும் உயிர் தப்பினார். ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து விமானங்களில் கோளாறு ஏற்படுவதும், விபத்தில் சிக்குவதும், போன்ற நிகழ்வுகள் விமானப் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

கத்தரிக்காய் வியாபாரி
ஜூன் 17, 2025 14:35

இது ஏர் இந்தியாவை பலவீனமக்கும் செயல். அந்நிய தலையீடு உள்ளதா என்று பார்க்க வேண்டும்


Ramesh Sargam
ஜூன் 17, 2025 13:15

ஏர் இந்தியா விமானங்கள் அனைத்தும் காயிலாங்கடைக்கு போட்டாலும் அவர்கள் வாங்க மறுப்பார்கள். அந்த அளவுக்கு மோசமானவை அந்த ஏர் இந்தியா விமானங்கள். மக்களின் உயிர் மீது அந்த ஏர் இந்தியா விமான நிறுவனம் விளையாடுகிறது.


Murthy
ஜூன் 17, 2025 12:10

air india விமானங்களை முறையாக பராமரிக்க வேண்டும் . ...


Apposthalan samlin
ஜூன் 17, 2025 10:22

2011 இல் மும்பை டு சவூதி போனென் ஒரு மூட்டை பூச்சி கடி நின்னு கிட்டே பயணம் செய்தேன் இவர்கள் எப்படி என்ஜினை சரி செய்வார்கள் ? அதில் இருந்து ஏர் இந்தியா பக்கமே போவது கிடையாது .ஏர்ஹோஸ்ட எல்லாம் கிழவிகள்


Ganapathy
ஜூன் 17, 2025 11:10

உனது பெண்டாட்டியையும் மகளையும் விமான பணிப்பெண்ணாக போட்டால்தான் உனக்கு புடிக்கும்.


Indian
ஜூன் 17, 2025 09:15

எல்லாம் ரிப்பேர்


புரொடஸ்டர்
ஜூன் 17, 2025 08:27

ஏர் இந்தியா விமானங்கள் அனைத்தும் தகுதியற்றவை என தெரிகிறது.


சனீஸ்வரன்
ஜூன் 17, 2025 07:43

ஏர் இந்தியாவுக்கு பிடிச்ச ஏழரைச்சனி


புதிய வீடியோ