வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோவாவில் பாதி வாக்காளர்கள் கிறிஸ்தவர்கள். அவர்களும் பிஜெபி க்கு வாக்களித்துள்ளனர். கேரளாவிலும் பிஜெபி பெருமளவில் கிறித்துவ வாக்குகளைப் பெற்றுள்ளது. நம்மூரு பாதிரிகள் கவனிக்க.
புதுடில்லி: ''கோவாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜ வெற்றி பெற்ற நிலையில் அம்மாநில மக்கள் வளர்ச்சிக்கும், சிறந்த நிர்வாகத்துக்கும் துணை நிற்கின்றனர்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.மஹாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜ கூட்டணி அமோக வெற்றி பெற்று இருந்தது.சமீபத்தில் நடந்த கோவா ஜில்லா பரிஷத்துகளுக்கு நடந்த தேர்தலில் பதிவானஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. வடக்கு கோவாவில் பாஜ 13, காங்கிரஸ் 8 இடங்களையும், தெற்கு கோவாவில் பாஜ 10 மற்றும் காங்கிரஸ் 1 இடத்தையும் வெற்றி பெற்றன. மற்ற இடங்களில் பிராந்திய கட்சிகளும், சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ts2vud8f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறந்த நிர்வாகத்துக்கு கோவா துணை நிற்கிறது. வளர்ச்சி அரசியலுக்கு துணை நிற்கிறது. பாஜ கூட்டணிக்கு ஆதரவு அளித்த கோவா சகோதர் சகோதரிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கோவாவின் வளர்ச்சிக்கான நமது முயற்சகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும். இ்நத அற்புதமானமாநில மக்களின் கனவுகளையும் லட்சியங்களையும் மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நமது கடினமாக உழைக்கும் தேஜ கூட்டணி தொண்டர்கள் களத்தில் பாராட்டுக்குரிய பணிகளை செய்துள்ளனர். அதுவே இந்த வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கோவாவில் பாதி வாக்காளர்கள் கிறிஸ்தவர்கள். அவர்களும் பிஜெபி க்கு வாக்களித்துள்ளனர். கேரளாவிலும் பிஜெபி பெருமளவில் கிறித்துவ வாக்குகளைப் பெற்றுள்ளது. நம்மூரு பாதிரிகள் கவனிக்க.