உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசா வனத்துறை அதிகாரி வீட்டில் ரெய்டு: தங்கக்காசுகள், ரூ.1.5 கோடி ரொக்கம் பறிமுதல்

ஒடிசா வனத்துறை அதிகாரி வீட்டில் ரெய்டு: தங்கக்காசுகள், ரூ.1.5 கோடி ரொக்கம் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில் வனத்துறை அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் தங்கக்காசுகள் மற்றும் ரூ.1.5 கோடி ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.ஒடிசாவில் ஜஜ்புர் மாவட்டத்தில் வனத்துறை துணை ரேஞ்சராக இருக்கும் ராம சந்திர நேபாக் என்பவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவருக்கு சொந்தமான 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். பல குழுவினர் இணைந்து நடத்திய இந்த சோதனையில், அடுக்குமாடி கட்டடம் ஒன்றில், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை 1.5 கோடி ரூபாய் எண்ணப்பட்ட நிலையில், இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணம் எண்ணும் பணி நடக்கிறது.மேலும், 4 கிலோ தங்க பிஸ்கட்கள் மற்றும் தலா 10 கிராம் கொண்ட 16 தங்கக்காசுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவருக்கு சொந்தமான பூர்விக வீடுகள் மற்றும் உறவினர் வீடுகளிலும் ரெய்டு நடக்கிறது.2வது ரெய்டுகடந்த ஒரு வாரத்தில் வனத்துறையில் அதிக சொத்து சேர்த்ததாக நடக்கும் இரண்டாவது ரெய்டு இதுவாகும். இதற்கு முன் கேயின்ஜர் பகுதியில் டிவிஷனல் அதிகாரி நித்யானந்தா நாயக் என்பவரருக்கு சொந்தமான வீட்டில் ரெய்டு நடந்தது. அதில், அவரது பெயரில் 115 இடங்கள் , 200 கிராம் தங்கக்காசுகள், ரைபிள்கள், கோடிக்கணக்கான சொத்து ஆவணங்கள், ரூ.1.55 லட்சம் ரொக்கம், தேக்கு மரப் பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 25, 2025 19:56

காட்டிலே மரத்திலே பணம் காய்ச்சதுன்னு சொல்லி ஜாமீனில் வந்துடுவார்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 25, 2025 19:07

பாஜக ஆட்சி அமைந்ததால் குட்டு வெளிப்பட்டதா >>>>


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 25, 2025 19:58

கமிஷன் போகததால் பிடிச்சாங்களா?


N Sasikumar Yadhav
ஜூலை 25, 2025 20:51

உங்க கோபாலபுர எஜமான் மாதிரி கிடையாது கட்டிங் சரியாக சென்றுவிட்டால் ரெய்டு நடக்காது . ஆனால் பாஜக ஆட்சியில் ரெய்டு நடந்தே தீரும்


ஆனந்த்
ஜூலை 25, 2025 18:44

எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறதோ...


புதிய வீடியோ