உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை

தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அண்மையில் தங்க நகைகள் மீதான கடன்களை வழங்கும் விதிகளில் ரிசர்வ வங்கி மாற்றம் செய்தது. பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த புதிய நடைமுறைகள் நடுத்தர தரப்பு மக்களை கடுமையாக பாதிக்கும் என்று அதிருப்தி குரல்கள் எழுந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kxl9r46s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தங்க நகைக்கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சிகள், நகைக்கடன் நிறுவனங்கள், நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளை தொடர்ந்து கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.அதன் முதல்படி நிலையாக, ரூ.2 லட்சத்துக்கும் குறைவான கடன்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. முக்கிய கட்டமாக, சிறுதங்க நகை கடன் பெறுபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிதி அமைச்சகம், கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது. புதிய விதிகளை அமல்படுத்த சிறிது அவகாசம் வழங்கி ஜன.1, 2026 முதல் செயல்படுத்தலாம் என்றும் மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
மே 30, 2025 15:26

தனியார்கள் தங்கத்தில் முதலீடுகளை செய்வதால் நாட்டுக்கு பலன் ஏதுமில்லை. கடத்தல்தான் அதிகரிக்கிறது. ஹவாலா நடத்தும் பயங்கரவாதிகள் குஷி.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 30, 2025 12:09

ரிசர்வ் வங்கியிடம் மேலும் ஒரு திட்டம் உள்ளது. அதாவது அடமானம் வைக்கும் தங்க நகைகளுக்கு உண்டான பில்களின் ஒரிஜினல் பில்களையும் தங்க நகைகளுடன் வங்கிகளிடம் சமர்ப்பித்தல் கட்டாயமாக்குவதே. ஆகவே அனைவரும் தங்களிடம் உள்ள தங்க நகைகளின் ஒரிஜினல் பில்களை பத்திரமாக வைத்திருக்கவும். பிற்காலத்தில் உபயோகப்படும்


Vasantha Vimala
மே 30, 2025 11:02

கோல்ட் லோன் பிகஇரு காமிச்சு ப்ரோமோஷன்/இன்சென்டிவ் வாங்கற ஆபீஸேர்களுக்கு சூப்பர் ஆப்பு... இனியாவது இவர்கள் வாங்கற சம்பளத்துக்கு வேலை செய்வார்களா...கொடுத்த லோன் கிட்டa கடன் ஆனால், இவர்களை விடக்கூடாது...ரெடிரிட்மென்ட் பெனிபிட்ஸ் kudakoodathu....


GMM
மே 30, 2025 10:18

2 லட்சம் கடன் கீழ் ஆதார், வங்கி கணக்கு இணைந்து உறுதிமொழி வாங்கி, 1 மணி நேரத்தில் கடன் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கலாம். வருமான வரி விலக்கு தொகை வரை ரசீது அல்லது 5 சதவீத வரி விதித்து 1 மணி நேரத்தில் கடன் வழங்கலாம். கடன் பெறும் காரணம் தெரிவிக்க வேண்டும்..


புதிய வீடியோ