உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிஜிட்டல் இந்தியாவில் புதிய வசதி: யு.பி.ஐ.,யில் தினசரி பணம் அனுப்பும் உச்சவரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிப்பு!

டிஜிட்டல் இந்தியாவில் புதிய வசதி: யு.பி.ஐ.,யில் தினசரி பணம் அனுப்பும் உச்சவரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிப்பு!

புதுடில்லி: நுகர்வோர், குறிப்பிட்ட சில பிரிவுகளில் இயங்கும் வணிகர்களுக்கு மேற்கொள்ளும் தினசரி யு.பி.ஐ., பரிவர்த்தனை வரம்பு 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு ஆன்லைனில் பணம் அனுப்ப நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது. தற்போதைய காலத்தில், யுபிஐ பண பரிவர்த்தனைகள் அதிகம் நடந்து வருகிறது. மாதம் தோறும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை தரும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xj52jwqk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நுகர்வோர், குறிப்பிட்ட சில பிரிவுகளில் இயங்கும் வணிகர்களுக்கு மேற்கொள்ளும் தினசரி யு.பி.ஐ., பரிவர்த்தனை வரம்பு 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், தனிநபரிடம் இருந்து வணிகருக்கான பி 2 எம் பரிவர்த்தனைக்கு மட்டுமே இது பொருந்தும், பி 2 பி எனப்படும் தனி நபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனை வரம்பு ஒரு லட்சம் ரூபாயாகவே நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

அதன் விபரம் பின்வருமாறு:

* காப்பீட்டு பிரீமியம், பயண முன்பதிவு, மூலதன சந்தையில் முதலீடு செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஒரே நேரத்தில் 5 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும். 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.* கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவதற்கான வரம்பு ரூ.6 லட்சமாகவும், கடன் மாதத் தவணைகள், சுற்றுலா, இஎம்ஐ உள்ளிட்டவற்றிக்கு பணம் செலுத்துவதற்கான வரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே பரிவர்த்தனையில் ரூ.5 லட்சமும், 24 மணி நேரத்தில் ரூ.10 லட்சமும் பணம் செலுத்தலாம்.* நகைகளை வாங்குவதற்கு ஒரே நேரத்தில் 2 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும். 24 மணி நேரத்தில் ரூ.6 லட்சம் பரிவர்த்தனை செய்யலாம்.* வங்கியில் டிபாசிட் செய்வதற்கு ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம்.* தனிநபர்களுக்குள் பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு ஒரு லட்சமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட்டில் யுபிஐ சாதனை

கடந்த ஆகஸ்ட் மாதம் 24.85 லட்சம் கோடி மதிப்புள்ள தொகை யுபிஐ பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டு உள்ளது. சராசரியாக தினமும் ரூ.80,177 கோடி ரூபாய் மதிப்பில் பணப்பரிவர்த்தனை நடந்து உள்ளது என என்பிசிஐ எனப்படும் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
செப் 17, 2025 19:25

போறாது. என்னோட ரேஞ்சுக்கு 15 லட்சம் வரை அனுமதி தரணும்.


SUBBU,MADURAI
செப் 17, 2025 22:54

அப்புசாமி மண்டை மண்ணுக்குள் போகும் வரை அந்த பாஞ்சி லட்சத்தை மட்டும் வாங்காம விட்றாதீங்க...


KR india
செப் 17, 2025 14:32

இந்திய அரசு மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட அனைத்து ஆப்-களும், இந்திய அரசின் இணைய தளத்தில், நேரடியாக பதிவிறக்கம் செய்ய வசதி வேண்டும்.


GMM
செப் 17, 2025 13:58

பணம் எதற்காக கொடுக்கப்பட்டது என்ற விவரம் வங்கியில் ஒவ்வொரு 5000 மேற்பட்ட பரிவர்த்தனையில் வாடிக்கையாளர் பதிவு இருக்க வேண்டும். உதாரணம் மாளிகை, வாடகை, உடுப்பு, அன்பளிப்பு, நன்கொடை. போன்றவை. மிகவும் சந்தேகத்திற்கு உரிய பரிவர்த்தனை கண்காணிக்க முடியும்.


Barakat Ali
செப் 17, 2025 13:15

தேர்தல் அன்பளிப்பை வாக்காளர்களுக்குக் கொடுக்க திருட்டு கட்சிக்கு உதவத்தான் ....


GMM
செப் 17, 2025 13:03

UPI app உள்ள போன் சுமார் 1000 ரூபாய் விலையில் வந்துள்ளது? மொத்த கொள்முதலில் இன்னும் குறையும். வங்கி கணக்கு உள்ளவர்களுக்கு atm கொடுப்பது போல் ஒரு upi போனை வங்கி கணக்குடன் இணைத்து கொடுத்து விடலாம். NPCI பயன்படுத்தி எளிதாக இருக்கும். ஒரு நாள் கட்டண பயிற்சி கொடுக்கலாம். வங்கி கணக்கு பராமரிப்பில் போன் விலையை மாதம் பிடித்து சீர் செய்ய வேண்டும். வங்கி/வாடிக்கையாளர் இணைப்பை அதிகரிக்கும். அதிக பண பரிவர்த்தனை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும்.


புதிய வீடியோ