உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியதால் அரசுக்கு ரூ.33,000 கோடி வருவாய்

பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியதால் அரசுக்கு ரூ.33,000 கோடி வருவாய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியதால், அரசுக்கு கூடுதலாக 33,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, கடன் மதிப்பீட்டு நிறுவனமான 'கேர்எட்ஜ் ரேட்டிங்ஸ்' கணித்துள்ளது.மத்திய அரசு, கடந்த ஏப்.,8ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, லிட்டருக்கு 2 ரூபாயும்; 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டருக்கு 50 ரூபாயும் உயர்த்துவதாக அறிவித்தது.சந்தை விலைக்கு குறைவாக எல்.பி.ஜி., சிலிண்டர் விற்பனை செய்வதால், கடந்த 2024--25ம் நிதியாண்டில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் 41,383 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து இருந்தன. இதனை ஈடு செய்வதற்காக கலால் வரியை உயர்த்தியதால், அரசுக்கு 33,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.மேலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டதால், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் நஷ்டம், சிலிண்டர் ஒன்றுக்கு 220 ரூபாயில் இருந்து 170 ரூபாயாக குறைந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

G VEERAMANIKANDAN
மே 17, 2025 11:02

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் எரிபொருட்களின் விலை உயர்வு செய்யப்படுகிறது, ஆனால் அதே சமயம் விலை குறைந்தால் விலை குறைப்பு செய்யாமல் இருப்பது சாமானிய மக்களை ஏமாற்றும் செயல்.


Baalasubramanian Ramanathan
மே 16, 2025 22:15

This one the atrocity by the central and state governments and oil companies. Already they have swallowed peoples money by way of uned price even though the international prices of the slashed down to ground level. They have swindled our own money to the extent of lacs and lacs of crore.


J.Isaac
மே 15, 2025 17:52

மக்களுக்கு மறைமுகமாக கொடுக்கும் விஷமருந்து


vadivelu
மே 15, 2025 09:23

அரசின் கடன் மக்களின் கடன், அதை குறைக்க உதவும்.


Amar Akbar Antony
மே 15, 2025 09:08

ஒரு சமயத்தில் இது சற்று சங்கடத்தை கொடுத்தாலும் நடந்த நடந்துகொண்டிருக்கிற துரோகி நாட்டுடன் பயன்பட்டுக் கொண்டிருக்கும் தளவாடங்கள் செலவுக்கும், நம் பாரத நாட்டு முப்படைகளுக்கும் உதவும் என்பதை உணர்வுபூர்ணமாக எற்றுக் கொள்ள வேண்டும். மேலும் காங்கிகளின் அரசிலிருந்த இலட்சக்கணக்கான போலி ரேஷன் கார்டுகள் காஸ் இணைப்புகளை களைந்து நேர்மறையாக ஊழலற்ற அரசினை நடத்தும் பிரதமருக்காகவும் ஏற்றுக் கொள்ளவேண்டும். என் பணம் நேர்மையான காரணத்திற்க்கு சிலவு செய்யப்படுகிறது. அதை மத்திய அரசு உறுதிப்படுத்துகிறது


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
மே 15, 2025 08:49

இதனால் மக்களுக்கு என்ன லாபம் அதனை உங்களை போன்ற பிசேபி ஆதரிக்கும் ஊடகங்கள் எப்போது சொல்லும் வாரா கடன் தள்ளுபடிக்கு தான் உதவும்


முருகன்
மே 15, 2025 07:41

இந்த காசை எடுத்து அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கெடுத்து விடுவார்கள் விலைவாசி ஏறி மக்கள் தலையில் விழும்


Kumar Kumzi
மே 15, 2025 08:55

ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஓட்டு போடுற ஒனக்கு ஏன் வலிக்குது


vivek
மே 15, 2025 12:11

டாஸ்மாக் பாட்டிலுகு மேல /பத்து ரூபாய் குடுக்குற மூளை உனக்கு


J.Isaac
மே 15, 2025 17:50

கட்சிகள் டோனேஷன் வாங்குவதும் ஓசி தானே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை