உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு நிலம் ஆக்கிரமிப்பு 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

அரசு நிலம் ஆக்கிரமிப்பு 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

மூணாறு:கேரளாவின் மூணாறு அருகே சொக்கர்முடி மலையில் அரசு துறை நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு விதிகளை மீறி கட்டுமானங்கள் நடப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டார். தேவிகுளம் சப் - கலெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமைலான குழுவினர் விசாரித்து, கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.வருவாய் துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை தடுக்க அதிகாரிகள் தவறி விட்டனர். கட்டுமானத்திற்கு தடை விதிக்கப்பட்ட பகுதி என்ற போதும், அங்கு வீடு கட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளது என அறிக்கையில் விசாரணை குழுவினர் தெரிவித்தனர்.தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை முதன்மை செயலர், இடுக்கி கலெக்டருக்கு உத்தரவிட்டார். அதன்படி தேவிகுளம் தாசில்தார், உதவி தாசில்தார், பைசன்வாலி முன்னாள் வி.ஏ.ஓ., உடும்பன்சோலை தாலுகா முன்னாள் சர்வேயர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை