உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசு இன்னும் ஓராண்டு கூட நீடிக்காது: ராகுல் ஆரூடம்

மத்திய அரசு இன்னும் ஓராண்டு கூட நீடிக்காது: ராகுல் ஆரூடம்

சங்ரூர்: பஞ்சாப் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடப்பதை முன்னிட்டு சங்ரூர் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் பேசியதாவது: போதை மருந்தை ஒழிக்க எத்தனை ஆண்டுகளை அமித்ஷா காலக்கெடு வைத்துள்ளார்.மூன்று ஆண்டுகளா? மூன்று ஆண்டுகளில் அமித்ஷா உள்துறை அமைச்சராக இருக்க மாட்டார். எனது கணிப்புப்படி, மத்திய அரசு இன்னும் ஓராண்டு கூட நீடிக்காது. எப்படியிருந்தாலும், போதை மருந்து பிரச்னையை மூன்று ஆண்டுகளில் ஒழித்துவிடுவேன் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.இங்குள்ள மக்களுக்கு, பஞ்சாபிற்காக உழைக்கும் அரசு தேவை. இங் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநில அரசு டில்லியில் இருந்து இயக்கப்படாது. மத்திய உள்துறை அமைச்சரோ, டில்லியின் முன்னாள் முதல்வரோ இயக்க மாட்டார்கள்.தற்போதைய சூழலில் பஞ்சாப் அரசின் கடிவாளம் பாதியளவு அமித்ஷாவின் கையிலும், பாதியளவு கெஜ்ரிவாலின் கையிலும் உள்ளது. பகவந்த் மன் வெறும் பார்வையாளராக உள்ளார். பஞ்சாப் டில்லியில் இருந்து ஆட்சி செய்யப்படுகிறது. லோக்சபாவில், முதல்வர் பக்வந்த் மன் உடன் அமர்ந்துள்ளேன். அவர் எங்கள் அருகில் அமர்ந்து பேசுவார். காலை 11 மணியளவில் அவரிடம் இருந்து மதுபான வாசனை வரும். பகவந்த் மன் மது அருந்தக்கூடாது எனக்கூறவில்லை. அத அவரின் தனிப்பட்ட விஷயம். போதை மருந்துக்கு எதிராக உண்மையாக போராட வேண்டும் என்றால், முதல்வர் மதுபானங்களின் பிடியில் இருக்கக்கூடாது. பஞ்சாபுக்காக போராடக்கூடிய, உங்களின் வேதனைகளை புரிந்து கொள்ளக்கூடிய நபர் தேவை. இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ambika. K
நவ 08, 2026 04:50

மன்மதலீலை என்று ஒரு படம். அதில் ய.கி.மகேந்திரன் கடைசியில் சட்டையை கிழித்து கொண்டு மவுண்ட் ரோட்டில் ஓடி வருவார். அதுதான்.அந்த படத்தின் கிளைமாக்ஸ். பய புள்ளை இது எந்த ஊர்ல ஓடப்போவதோ.


Santhakumar Srinivasalu
நவ 04, 2026 22:01

வியட்நாம் ஜோசியர் கிட்ட ஆருடம் கேட்டு வந்து விட்டார்!


Ramesh Sargam
நவ 04, 2026 21:03

இன்னும் ஓரிரு ஆண்டில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியே காணாமல் போகும். சோனியா குடும்பத்தினர் இத்தாலி போகும்.


Rajan
நவ 04, 2026 20:35

இதையே 2126ம் ஆண்டிலிம் உளறுவார்


R.MURALIKRISHNAN
நவ 04, 2026 19:23

ராகுல் ஜெயிச்ச தொகுதிக்கு இதுவரை என்ன நல்லது பண்ணிருக்கு. ஆயுசு முழுவதும் அடுத்தவனின் அந்திய தேச விரோதிகளின் கை புள்ளயாய் அலையும் உன்னை பார்த்து உலகம் சிரிக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை