உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யுகாதி பண்டிகைக்குள் கிரஹலட்சுமி பணம்

யுகாதி பண்டிகைக்குள் கிரஹலட்சுமி பணம்

தாவணகெரே; ''நிலுவையில் உள்ள கிரஹலட்சுமி பணம் யுகாதி பண்டிகைக்குள் விடுவிக்கப்படும்,'' என, மாயகொண்டா காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவந்தப்பா கூறினார்.மாயகொண்டாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:கிரஹ லட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக பணத்தை விடுவிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.யுகாதி பண்டிகைக்குள் அனைத்து பிரச்னையும் சரி செய்யப்பட்டு பணம் விடுவிக்கப்படும். நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் ஒப்புதல் கிடைத்ததும் சட்டம் உடனடியாக அமலுக்கு வரும். பின், நிதி நிறுவனங்கள் மக்களை துன்புறுத்தினால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனது தொகுதியில் யாராவது நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால், தயவு செய்து என்னிடம் சொல்லுங்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை