உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆற்று குடிநீர் பெறுவோருக்கு கர்நாடகாவில் பசுமை வரி

ஆற்று குடிநீர் பெறுவோருக்கு கர்நாடகாவில் பசுமை வரி

பெங்களூரு, மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகளில் இருந்து, குடிநீர் பெறும் நகர்ப்புற மக்களிடம், பசுமை வரி வசூலிக்க கர்நாடக மாநில வனத்துறை திட்டமிட்டுள்ளது.கர்நாடகாவில் பாயும் காவிரி, கிருஷ்ணா, துங்கா, பாத்ரா, மல்லபிரபா, கட்டபிரபா, ஹேமாவதி உட்பட 11க்கும் மேற்பட்ட ஆறுகள், மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் உற்பத்தியாகின்றன. வனப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், கால்நடைகள், தங்களின் குடிநீருக்கு இந்த ஆறுகளையே நம்பியுள்ளனர்.இந்த ஆறுகளில் இருந்து சிறப்பு குடிநீர் திட்டங்கள் வாயிலாக, பெங்களூரு, மாண்டியா, மைசூரு, ஷிவமொக்கா, மங்களூரு, பெலகாவி, பல்லாரி, சிக்கமகளூரு என, பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக அந்தந்த நகரங்களின் குடிநீர் வாரியங்கள் கட்டணம் வசூலிக்கின்றன.அதே நேரம், குடிநீர் இணைப்பு பெற்றுள்ள நகர்ப்புற மக்களிடம், தனியாக பசுமை வரி வசூலிக்க வனத்துறை ஆலோசிக்கிறது. இது தொடர்பாக, அரசுக்கு முறைப்படி கோரிக்கை அனுப்பி வைக்கும்படி, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ