உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி ஆட்சியில் தான் அரசு வங்கிகளின் வளர்ச்சியில் திருப்புமுனை: நிர்மலா சீதாராமன்

மோடி ஆட்சியில் தான் அரசு வங்கிகளின் வளர்ச்சியில் திருப்புமுனை: நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் தான் பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சியில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் நேற்று பேசிய எதிர்க்கட்சிகளின் தலைவர் ராகுல், 'அனைத்து இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பினரை சந்தித்து பேசினேன். அப்போது, பொதுத்துறை வங்கிகளை நிலை மற்றும் அதனால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்,' என்று கூறியிருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lm5cwqfr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதைத் தொடர்ந்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'ஒவ்வொரு இந்தியனும் எளிதாக கடன் பயன்பெறும் வகையில், பொதுத்துறை வங்கிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இந்த வங்கிகளை, தனியார் நிதி நிறுவனமாக்கி, பெரிய பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட்களுக்குமானதாக மாற்றி விட்டார். நண்பர்களுக்கு அளவில்லாமல் பணத்தை வாரி வழங்குவதை பிரதமர் மோடி அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.மக்களிடம் இருந்து லாபம் பெறும் நோக்கில் பொதுத்துறை வங்கிகள் மாறி விட்டது. ஆள்பற்றாக்குறை மற்றும் நெருக்கடியான சூழல் ஆகியவற்றால், இலக்குகளை அடையாமல் திணறி வருகின்றன. பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை, எனக் குறிப்பிட்டிருந்தார். ராகுலின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது: அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை ராகுல் முன்வைத்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பொதுத்துறை வங்கிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். காங்கிரஸ் ஆட்சியின் போது கண்மூடித்தனமாக கடன்களை வாரி வழங்கியதால், பொதுத்துறை வங்கிகள் சரிவை சந்தித்தன. ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுத்து, தங்களின் கூட்டாளிகளுக்கு கடன் பெற்றுக் கொடுத்தது காங்கிரஸ் ஆட்சியில் தான். கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் மூலம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக லோன் பெற்றவர்களின் எண்ணிக்கை 238 சதவீதமும், ரூ.50 லட்சத்திற்கு அதிகமாக லோன் பெற்றவர்களின் எண்ணிக்கை 300 சதவீதமும் அதிகரித்துள்ளது. உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி பொதுத்துறை வங்கி ஊழியர்களின் கடின உழைப்பை ராகுல் அவமதிக்கிறார், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

கிஜன்
டிச 12, 2024 21:58

ஒரு காலத்துல சேமித்து வைக்கணும்னா வங்கில பணத்தை போடலாம் .... இப்போ தவிட்டு பானையே பெட்டர் ..... எவ்வளவு மறைமுக சுரண்டல்கள் ..... ஒரு அஜித் படத்தில் வங்கிகள் எப்படி சுரண்டுகின்றன என்று விரிவாக விளக்கியிருப்பார் ....


Ramesh Sargam
டிச 12, 2024 20:07

காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகளை ஏமாற்றி பல தொழில்நிறுவன முதலைகள் வளர்ந்தன. உதாரணம்: விஜய் மல்லையா போன்றவர்கள். இன்றுவரை அவைகளை பிடிக்க முடியவில்லை தண்டிக்க முடியவில்லை. காரணம் அவர்கள் வெளிநாட்டில் தஞ்சம்.


தாமரை மலர்கிறது
டிச 12, 2024 19:52

அனைத்து அரசு வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டும். அரசு வங்கிகள் வாடிக்கையாளர்களை கவனிப்பதில்லை. மிகவும் மெத்தனமாக செயல்படுகிறார்கள். தனியார் மயமானால், இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும். வருவாய் கூடும்.


Srinivasan Rathnam
டிச 12, 2024 18:30

ராகுலுக்கு நகர்வாலா கதையை எடுத்து சொல்லுங்கள்.


V Gopalan
டிச 12, 2024 16:45

Finance Minister herself can appreciate but in reality, it is a curse. Govt amalmagated the banks of Syndicate Bank with Canara Bank. The officials of Syndicate bank to some extent customer friendly whereas the staff and the service of Canara Bank is not at all satisfactory. At whose instance, once amalmagated but again merged to other banks ie. far away besides the staff strength is not adequate. In Bengaluru - Sanjay Nagar Branch is merged with the 80 feet Road branch. Let the Finance Minister once take a ground reality instead of self praising.


madhumohan
டிச 12, 2024 15:32

மக்களிடம் பிடுங்கி வங்கிகளை வளர செய்தல் மிக நல்ல விஷயம்


பாமரன்
டிச 12, 2024 15:16

அவர் காது காதுன்னா இந்தம்மா லேது லேதுன்னு சொல்ல ...பக்கோடாஸ் ஆமாமாமாமாம்னு பீப்பி ஊத பாமர மக்களுக்கு இன்னமும் பிம்பிளிக்கி பிளாக்கி..


hari
டிச 12, 2024 15:56

அய்யோ பாவம் நல்லாத்தான் இருந்தாரு இந்த பாமரன்.....திடீர்னு என்ன ஆயிடுச்சி தெரில.....


Senthoora
டிச 12, 2024 14:44

தெரிந்துதான் பேசுறிங்களா? வங்கியில் பணம் இருந்தாலும் வரி, இல்லாவிட்டாலும் வரி, எடுத்தாலும் வரி, போட்டாலும் வரி, ஏழைகள் படும் பாடு இருக்கே, கோபிநாத் சாரின்," நீயா நானா நிகழிச்சியில் கூட இதை சொல்லி எத்தனைபேர் கண்ணீர்விட்டாங்க. அதைப்பார்த்துட்டு கருத்துப்போடுங்க.


ஆரூர் ரங்
டிச 12, 2024 16:09

வாராக்கடன் பற்றி எழுதுனாலும் எல்லா நாடுகளிலும் உள்ள கட்டண முறை பற்றி எழுதி திசை மாற்றுகிறீர் . சிவகங்கை சீமான் போன் மூலம் வங்கிகளை மிரட்டி கடன் வழங்க வைத்து வாராக்கடன் அளவை இமாலய அளவுக்குக் கொண்டு சென்றதால்தான் கட்டணம் வசூலிக்க வேண்டியுள்ளது. இணைய வங்கி சேவை, விரைவான சேவை, அதற்கான பாதுகாப்புச் செலவுகளை பயன்பெறும் வாடிக்கையாளர்களே செலுத்துவதுதான் நியாயம். முடியாவிட்டால் மினிமம் பாலன்ஸ் இல்லாத ஜன்தன் கணக்குக்கு மாறுங்கள்.


Sampath Kumar
டிச 12, 2024 14:30

அப்படி ஆபத்தில் இயங்கி இருந்தால் என்னத்துக்கு வங்கிகளை உன்னை ஈர்கள்? பொது துறைகளை எல்லாம் ஏன் தனியாருக்கு தார் வர்தேர்ர்கள் நரசிம்மன் பதில் சொல்லு பார்க்கலாம்


ghee
டிச 12, 2024 14:55

அறிவிலி சொம்பு.. எப்படி நஷ்டம் வந்தது. நீ சொல்லு பாப்போம்


vetri
டிச 12, 2024 14:24

ஆமாம்... இல்லையென்று சொல்லவில்லை... வீட்டுக்கடன் அல்லது தனி நபர் கடன் வாங்கினால்... வாங்கும் போது ஒரு வட்டி - வாங்கிய சில வருடங்கள் கழித்து இன்னொரு வட்டி விகிதம்... மினிமம் பேலன் இல்லை என்றால் அதற்கு ஒரு அபராதம்... மொபைல் போனுக்கு குறுந்தகவல் அனுப்புவதற்கு ஒரு தொகை... ஏ.டி.எம். கார்டு வைத்திருந்தால் வருடத்திற்கு ஒரு பராமரிப்பு தொகை என்று விதித்தால் வங்கிககள் ஏன் வளராது. ஏழைகள் கடன் வாங்கினால், மிரட்டி வீடு, வாகனத்தை பறிமுதல் செய்வர். ஆனால், அம்பானி - அதானி கடன் வாங்கியிருந்தால் அவர்களுக்கு கடன் தள்ளுபடி ... மாநில அரசு வருமானத்திற்காக டாஸ்மாக்கை நடத்துகிறது. மத்திய அரசு ஜி.எஸ்.டி., என்ற வரி நிறுவனத்தை நடத்தி எல்லா பாமர மக்களையும் வரி செலுத்துவது கட்டாயம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மக்களும் சாப்பிடும் அரிசிக்கு ஜி.எஸ்.டி., விதித்த நிதியமைச்சர் இருக்கும் வரை இந்தியா ஏழை நாடாகத்தான் இருக்கும்... என்றுமே முன்னேற்றம் ஏற்படாது. பெயருக்கு வேண்டுமானால், நாங்கள் ஐந்தாவது வளர்ச்சியடைந்த நாடு என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால்... பாமர மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் நிலை...?