வாசகர்கள் கருத்துகள் ( 2 )
81 வேலைக்கு எட்டு லட்சம் பேர் விண்ணப்பித்து கட்டணமாக ஆளுக்கு 200 ரூவா உருவி 16 கோடி ரூவா தேத்திரலாம்.
வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது
புதுடில்லி: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் (எச்.ஏ.எல்.,) நிறுவனத்தில் காலியாக உள்ள 81 ஆப்பரேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 5.ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் (எச்.ஏ.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அட்மின் அசிஸ்டென்ட் 2, ஆப்பரேட்டர் பிரிவில் வெல்டிங் 45, எலக்ட்ரானிக்ஸ் 12, எலக்ட்ரிக்கல் 7, மெக்கானிக்கல் 5, ஆப்ரேட்டர் (லேப்) 1 உட்பட மொத்தம் 81 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி என்ன?
டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும். ஆப்ரேட்டர் (லேப்) பணியிடங்களுக்கு வேதியியல் பாடப்பிரிவில் பி.எஸ்.சி., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்வது எப்படி?
எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிப்பது எப்படி?
https://hal-india.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பக்கட்டணம்
விண்ணப்பக்கட்டணம் ரூ.200. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
81 வேலைக்கு எட்டு லட்சம் பேர் விண்ணப்பித்து கட்டணமாக ஆளுக்கு 200 ரூவா உருவி 16 கோடி ரூவா தேத்திரலாம்.
வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது