உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெஸ்ட் இண்டீஸை எளிதில் வீழ்த்தியது இந்தியா; சச்சின் சாதனையை முறியடித்தார் கோலி

வெஸ்ட் இண்டீஸை எளிதில் வீழ்த்தியது இந்தியா; சச்சின் சாதனையை முறியடித்தார் கோலி

திருவனந்தபுரம்: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கோலி மற்றும் கேப்டன் கில்லின் சதத்தினால், இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரு அணிகளுக்கு இடையயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன் பீல்டு சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கில், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேம்ப்பெல், க்ரீவ்ஸ் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 135ஐ எட்டிய போது, 62 ரன் விளாசிய கேம்ப்பெல் குல்தீப் சுழலில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, கார்ட்டி (13) பிரசித் கிருஷ்ணா வேகத்தில் நடையை கட்டினார். சாய் ஹோப்ஸ் 12 ரன்னிலும், சிறப்பாக ஆடி சதம் அடித்த க்ரீவ்ஸ் 101 ரன்னிலும், ஆன்ட்ரூ ரன் ஏதுமின்றியும் குல்தீப் பவுலிங்கில் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் ஜாங்கோ அரைசதம் (58 ரன் நாட் அவுட்) எடுத்தார்.இதனால், 50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன் எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும், நிதிஷ் குமார் ரெட்டி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.296 ரன் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் கில்லும், ரோகித் ஷர்மாவும் சிறப்பான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர். 32 ரன்னில் ரோகித் ஷர்மா அவுட்டானார். மறுமுனையில் அதிரடியாக ஆடி வந்த கேப்டன் கில்லும், விராட் கோலியும் அரைசதம் அடித்தனர். சிறப்பாக ஆடிய கில் 110 ரன்னில் அவர் அவுட்டானாலும், மறுமுனையில் விராட் கோலி தன்னுடைய ரன் வேட்டையை நிறுத்தவில்லை. அவர் 74 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அதன்பிறகும், சிக்சர் மழையை பொழிந்த கோலி, கடைசியில் அடுத்தடுத்து இரு சிக்சரை அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதனால், 41.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி கவுகாத்தியில் 30ம் தேதி நடக்கிறது.

சச்சின் சாதனையை முறியடித்தார் கோலி

* ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 15 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலியும் இணைந்தார். அவர், சச்சின் சாதனையை முறியடித்து 303 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டினார். இதற்கு முன்பாக சச்சின் 381 இன்னிங்சில் 15 ஆயிரம் ரன்னை கடந்திருந்தார். * அதுமட்டுமில்லாமல், ஒரு நாட்டில் அதிக ரன்களை குவித்த சச்சினின் (6,976 ரன்) சாதனையையும் கோலி முறியடித்துள்ளார். இவர் சொந்த மண்ணான இந்தியாவில் மட்டும் 6,983 ரன் எடுத்துள்ளார். * இந்தப் போட்டியில் கோலி 9 சிக்சர் அடித்துள்ளார். இதன் மூலம், தனது ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒரு போட்டியில் அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Arasu
செப் 28, 2026 14:03

இப்போது யாரும் ஒரு நாள் கிரிக்கெட்டை பார்ப்பது கிடையாது ....யார் ரெகார்ட் பண்ணால் என்ன ...இல்லை பண்ணாடி என்ன .....................விலைவாசி குறைய போதா


Vasan
செப் 28, 2026 03:11

சாமி, எனக்கொரு சந்தேகம். நம் அண்டை நாடுகளான, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாள், பூட்டான் ஆகியவற்றில் கிரிக்கெட் பிரபலமாகியுள்ளது போல், சீனாவில் ஏன் விளையாடப்படவில்லை?


Vijay
செப் 28, 2026 06:03

நண்பரே, காமன் வெல்த் நாடுகளில்தான் கிரிக்கெட் பிரபலமானது மற்றும் ஆடப்படுகிறது. இந்த மாதிரி உருப்படாத விளையாட்டெல்லாம் கம்யூனிஸ்ட் நாடுகளில் ஆடப்படுவதில்லை.


Vasan
செப் 28, 2026 07:06

A to Z : Afghanistan and Zimbabwe are not commonwealth countries. Wondering how Cricket got popular there and they are playing international cricket for several decades. So, being a member of Commonwealth countries is not an eligibility criteria.


karupanasamy
செப் 28, 2026 08:51

ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாபவே வெள்ளையர்களால் ஆளப்பட்ட நாடு எனவே அங்கு கிரிக்கெட் தொன்று தொட்டு உண்டு அவர்கள் டெஸ்டமெட்ச் தரத்துக்கு 1980களில்தான் வந்தார்கள். அங்கு வெள்ளையர்களுக்கு எதிராக கலவரம் நடந்த பொது பெரும்பாலான வேள்கையர்கள் நாட்டைவிட்டு வெளியேறி ஆஸ்திரேலியா நியூஸிலாந்து இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். ஆஸ்திரேலியாவில் ஜிம்பாபிவெயிலிருந்து குடிபெயர்ந்த வெள்ளைக்காரர்கள் அதிகமுண்டு. ஜிம்மபவேவில் கலவரம் நடந்தபோது வெள்ளைக்காரர்களின் வீடு நிலம் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க கறுப்பினத்தவர்களை வேலைக்கு அமர்த்தினர் அந்த காலத்தில் டிவி செய்திகளில் ஒளிபரப்பினார்கள். ஆப்கனில் 1980களில் சோவியத்திற்க்கு எதிராக நடந்த வன்முறைபோர்களினால் பாதிக்கப்பட்ட ஆபகனியர்கள் பாக்கிஸ்த்தானில் அகதிகளாக சென்றனர் அவர்கள் கிரிக்கெட் விளையாடத்தொடங்கி கிரிக்கெட்டை பிரபலப்படுத்திவிட்டனர்.


Sri
செப் 27, 2026 22:37

shubman gill - 22nd half century.


Kannan Chandran
செப் 27, 2026 22:26

Asian Games- ல் பதக்க பட்டியலில் குட்டி நாடுகள் எல்லாம் நமக்கு மேல் இருப்பதற்கு காரணம் இந்த ஒரு விளையாட்டு மட்டுமே..


Santhakumar Srinivasalu
செப் 27, 2026 21:25

கஷ்டம்?


Vasan
செப் 27, 2026 21:23

இளவரசர் கில் மற்றும் அரசர் கோஹ்லி இன்று சதமடிக்க வாழ்த்துக்கள்.