உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2025ல் உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா; டாப் 10 நாடுகள் இதோ!

2025ல் உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா; டாப் 10 நாடுகள் இதோ!

புதுடில்லி: நடப்பு 2025ம் ஆண்டில் உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து எட்டாவது ஆண்டாக, பின்லாந்து முதலிடத்தை பெற்றுள்ளது.மகிழ்ச்சி என்ற உணர்வு இல்லாவிட்டால் வாழ்க்கை பெரிய சுமையாகி விடும் என்பார்கள். அந்த உணர்வு இன்றி, எந்த மாபெரும் சாதனையும் நடந்ததில்லை என்பதும் நாம் அறிந்ததே. ஆக்ஸ்போர்டு பல்கலையின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், 2025ம் ஆண்டில் உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினம் முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கென உலகின் 147 நாடுகளில் மக்கள் வாழ்க்கைத்தரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த மக்கள் எண்ணம், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டன. இது பற்றி மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.இதில், அதிகபட்ச புள்ளிகள் 10 என்றால், முதலிடம் பெற்ற நாடான பின்லாந்து 7.74 புள்ளிகளுடன் உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற தகுதியை பெற்றது.தொடர்ந்து எட்டாம் ஆண்டாக இந்த தகுதியை பின்லாந்து பெற்றுள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகியவை முதல் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன. இந்தியாவின் அண்டை நாடுகளில், இலங்கை 133வது இடத்திலும், வங்கதேசம் 134வது இடத்திலும், நேபாளம் 92வது இடத்திலும், சீனா 68வது இடத்திலும் உள்ளன. 2012ம் ஆண்டில் 11 வது இடத்தில் இருந்த அமெரிக்கா, 24 வது இடத்திற்கு சென்றுள்ளது. இங்கிலாந்து 23வது இடத்தைப் பிடித்துள்ளது.'டாப் 10' நாடுகள் பட்டியல் வருமாறு;1. பின்லாந்து2. டென்மார்க்3. ஐஸ்லாந்து4. ஸ்வீடன்5. நெதர்லாந்து6. கோஸ்டாரிகா7.நார்வே8. இஸ்ரேல்9. லக்சம்பர்க்10. மெக்சிகோ.மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. சியாரா லியோன், லெபனான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.அதெப்படி இருக்க முடியும்?இந்த மகிழ்ச்சி பட்டியலில், இந்தியாவை காட்டிலும் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 109ம் இடத்தில் உள்ளது. இந்தியா 118ம் இடத்தில் உள்ளது.கல்வி, சமூகச்சூழல், பொருளாதாரம், மக்கள் வாழ்க்கைத்தரம் அனைத்திலும் இந்தியாவை விட பின் தங்கியுள்ள பாகிஸ்தான் முன்னணியிலும், இந்தியா பின்தங்கியும் இருப்பதாக அறிக்கையில் கூறியுள்ளனர். இத்தகைய முடிவுகள், அறிக்கைகள், ஆய்வுகளின் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Natchimuthu Chithiraisamy
மார் 26, 2025 19:07

இஸ்ரேல் காரனை விட இந்தியா காரன் நல்ல சாப்பாடு சாப்பிடுகிறான். அப்படி இருக்கும் போது இஸ்ரேல் காரன் மகிழ்ச்சி அடைகிறான் என்பது வேடிக்கையானது.


अप्पावी
மார் 21, 2025 10:15

இங்கே ஒருவர் மகிழ்ச்சியா இருந்தா 140 கோடி பேரும் மகிழ்ச்சின்னு ஒரு ஃபார்முலா இருக்கே. அதை அவிங்களுக்கு சொல்லலியா?


ராமகிருஷ்ணன்
மார் 21, 2025 07:15

நெம்பர் ஒன் முதல்வர் ஆட்சியில் தமிழகம் 99 சதம் வாங்கி உலகத்துல முதலிடத்தை பிடித்துள்ளது என்று திமுகவினர் நோட்டீசு அடிச்சு ஒட்டி வருகிறார்கள்


தாமரை மலர்கிறது
மார் 20, 2025 21:30

முதல் பத்து இடங்களில் இந்தியா இருக்க வேண்டும். போர் நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேலின் நிலைமை இந்தியாவை விட படுமோசம். பிஜேபி ஆட்சியில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா மகிழ்ச்சிகரமான இந்தியாவாக உள்ளது.


Ray
மார் 20, 2025 22:52

பல டாக்டர்களை பார்த்தும் குணமடையலைன்னு தனக்குத்தானே வயிற்றுவலி ஆப்ரேஷன் பண்ணிக்கிறான் ரயிலில் அபாய சங்கிலியில் கைப்பையை தொங்கவிட்டு ரயில் நின்னபிறகு தப்பி ஓடுகிறான் ரயில்வே கேட்டில் நிக்கிது நூற்றுக் கணக்கான ஆட்டோ கார் எல்லாம் என்ன காரணம்னா இந்தியில் படிச்சு மேதாவிகளா ஆனதுனால கிடைத்த சந்தோஷம்தான். எங்கும் எதிலும் நான்தான் பஷ்ட்டுன்னு பீத்திக்கணும் இதுல நம்ம சம்பந்தி ஆபிகானிஸ்தானைவிட நம்ம மேல்னு ஆத்திக்க வேண்டியதுதான்


Ray
மார் 20, 2025 21:15

என்னசொல்ல அரங்க டாப் டென் ல வருமா?


अप्पावी
மார் 20, 2025 20:29

ஏதோ சதி. நம்மளை விட பாக்கிஸ்தான் எப்பிடி மகிழ்ச்சியா இருக்க முடியும்? குண்டு வெச்சு கொலை பண்ணுனாத்தான் மகிழ்ச்சியோ? எப்பிடியோ ஆனந்தமாக இருங்க.


arulmurugan
மார் 20, 2025 21:38

unmai sudum


Saai Sundharamurthy AVK
மார் 20, 2025 20:22

ஒரு வீட்டில் மக்கள் தொகை 4 பேர் என்றால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், அதே குடும்பத்தில் மக்கள் தொகை 140 கோடி பேர் என்றால் எப்படி அதே மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் ???? ஆகவே, இந்த வெளிநாட்டு கருத்து கணிப்புகள் எல்லாம் திராவிட மாடல் போல ஸ்டிக்கர் பட்ஜெட் போட்டு தமிழ்நாடு சந்தோசமாகவும், பாலும், தேனும் ஓடும் மங்களகரமான மாநிலம் போலவும் கட்டிக் கொண்டு உள்ளுக்குள் சிலகதித்துக் கொள்வது போல !! வெளிநாட்டு கருத்து கணிப்புகளில் மொத்தமே 5 லட்சம் கூட தேராத ஜனத்தொகை உள்ள நாடுகள் எல்லாம் பட்டியலில் முதலிடம் பெறும். அவ்வளவு தான் அவர்களின் மனநிலை.....!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை