உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானாவில் யாருக்கும் ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை: விவசாயிகள் முடிவு

ஹரியானாவில் யாருக்கும் ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை: விவசாயிகள் முடிவு

சண்டிகர் : ஹரியானா சட்டசபை தேர்தலில் யாரையும் ஆதரிக்கவோ, எதிர்க்கவோ போவது கிடையாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லியில் நுழைய முயன்ற விவசாயிகள் சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, ஹரியானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள ஜிந்த் மாவட்டத்தில் பாரதிய கிசான் நவுஜவான் சங்கம் சார்பில் ' மகாபஞ்சாயத்து' என்ற பெயரில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில், விவசாய சங்க தலைவர்கள் ஜஜித் சிங் தலேவல், ஷ்ரவன் சிங் பந்தர் மற்றும் அபிமன்யூ கோஹத் ஆகியோர் பங்கேற்றனர். அதன் பிறகு ஜஜித் சிங் தலேவல் கூறியதாவது: தேர்தலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் போராட்டத்தை வலுப்படுத்துவதே எங்கள் நோக்கம். இந்த தேர்தலில் நாங்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம். எதிர்க்கவும் மாட்டோம். எங்களது போராட்டத்தை வலுப்படுத்த அரசின் தோல்வியையும், எங்களுக்கு எதிராக எடுத்த முடிவுகளை மக்களிடம் தெரிவிப்போம். எங்களது கோரிக்கைகள் பஞ்சாப், ஹரியானா, மாநில விவசாயிகளுக்கு மட்டுமல்ல. ஒட்டு மொத்த விவசாயிகளுக்கும் ஆனது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை